- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
கீழ்ப்பாட்டில், “ந்தகோபன்மகனென்னுங் கொடியகடிய திருமாலால்“ என்று -டிபற்றதகப்பனை, வெறுத்துக்கூறினாள், இப்பாட்டில் பெற்றதாயை வெறுத்துக்கூறுகின்றாள். கண்ணபிரான் இவ்வளவு தீம்பனாயிருப்பதற்குக் காரணம் -யசோதை அவனை வளர்த்த பொல்லாங்கு என்றிருக்கிறாள். அவள் செவ்வையாக நியமித்து பயபக்திகளுண்டாம்படி ஸக்ஷித்து வளர்த்திருப்பளாகில் இவன் இப்படித் தீம்பனாயிருக்கமாட்டான், “அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்னவேண்டும்படி அவள் இவளைத்தான் தோன்றியாக விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததனால் இவன் தலைவிரித்தாடும் தீம்பனாகப் பெற்றான் என்றிருக்கிறாள். “பெற்றதாய் வெற்றவேறிதேவேம் பேயாக வளர்த்தாள் என்ற அந்வயக்ரமம் ஒரு பலினைவிரும்பிப் பிறர்க்கு அநர்த்தத்தை விளைப்பாருண்டு, அங்ஙனன்றியே யஸோதை நிஷ்ப்ரயோஜநமாகவே பராநர்த்தத்தை விளைக்க இவனை வளர்த்தாளே! என்கிறாள். வேம்பேயாக என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி - “வேம்பும் கரும்புமாக வளர்க்கையன்றிக்கே வெறும்வேம்பேயாக வளர்த்தாள், அவன்வேம்பானது வளர்த்த பொல்லாங்கு என்றிருக்கிறாள்“ என்பதாம். வெற்றவேறிதே - சிறிதும் பலனில்லாதபடி என்கை. ஒருவகைக் குறிப்பிடைச்சொல். “செக்கஞ்செகவென்று“ “கன்னங்கரேலென்று“ என்னுமாபோலே வெற்றவேறிதே என்பதும் ஒருவகை வழக்கச்சொல் “வேம்புபோலே வளர்த்தாள்“ என்னாமல், “வேம்பேயாக வளர்த்தாள்“ என்றது - தீம்பின்மிகுதியாலேயுண்டான வைரஸ்யாதிஸயத்தைக்காட்டும்.
உரை:2
'வெற்றியுடைய கருடக்கொடியோனின் ஆணையை மீறி ஒன்றும் நடக்காத இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லாத வகையில் பெற்ற தாயான யசோதை இவனை முழுக்க முழுக்க வேம்பே ஆக வளர்த்திருக்கிறாளே. தோழியர்களே. (அவனை அன்றி வேறெதையும் விரும்பாத அவன் பிரிவைத் தாங்க முடியாமல் விம்மி விம்மும் என்) குற்றமற்ற முலைகளை அழகிய திரண்ட அவன் தோள்களோடு இதுவரை பிரிந்திருந்த குறை தீர அவன் மறுத்தாலும் விடாது தோளில் என் முலைகளை அணையும் படி இறுக்கக் கட்டுங்கள்.
English Translation
He moves like a despot in the world sporting a vicious bird-banner. His mother repents bitterly that she brought up a useless son. Bring the insolent youth to justice; bind him up firmly-by his beautiful arms to my faultless breasts.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்