விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அழிலும் தொழிலும் உருக் காட்டான்*  அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்* 
    தழுவி முழுசிப் புகுந்து என்னைச்*  சுற்றிச் சுழன்று போகானால்* 
    தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே*  நெடுமால் ஊதி வருகின்ற* 
    குழலின் தொளைவாய் நீர் கொண்டு*  குளிர முகத்துத் தடவீரே*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அழகிலும் - அமுதாலும்
தொழிலும் - தொலுதாலும்
உரு காட்டன் - தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன் - (உருவைக் காட்டாவிடினும் “அஞ்செல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன் - ஒருமஹாநுபாவன் (கண்ணன்
புகுந்து - இங்கே வந்து

விளக்க உரை

உரை:1

அப்பெருமானை ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்றும் அவன் சோதிவாயாலே அபயப்ரதாநம் அருளப்பெறவேணுமென்றும் ஆசை கரைபுரண்டு அதற்காகச் சிறுபயல்கள் செய்யும் உபாயத்தையுஞ் செய்வேன், மேலையார் செய்யுமுபாயத்தையும் செய்வேன், (அதாவது -கண்ணீரைப் பெருகவிட்டு அழுவேன், ப்ரஹ் நேரிலேவந்து திருவுருவைக்காட்டுவதுமில்லை, ஆகாஸ வாணிசொல்லுமாபோலே அஸரீரியாகவாகிலும் நின்று “அஞ்சேல்“ (பயப்படாதே, நானிருக்கிறேன்) என்றொரு வார்த்தை சொல்வதுமில்லை, இப்படி ஸர்வாத்மநா உபேக்ஷைபண்ணிக் கிடக்கிற அவனை மறந்தாகிலும் ஒருவாறு ஆறியிருப்போமென்று பார்த்தாலோ, அப்படியுமிருக்க வொண்ணாதபடி உருவெளிப்பாட்டாலே ஹிம்ஸிக்கின்றானே!, (உருவெளிப்பாடாவது -மெய்யாகவந்து ஸம்ஸ்லே ஷம்கொடாமல் மாநஸாநுபவ மார்ரத்துக்கு விஷயமாம்படி தனது எல்லா அவயவங்களையும் அருகே உலவச் செய்தல், இத்தகைய அநுபவம் நம்மாழ்வாருடைய திருவாய்மொழியில், எங்ஙனேயே வன்னைமீர்காள்!“ -“ஏழையராவியுண்ணும்“ என்ற இரண்டு திருவாய்மொழிகளில் நிகழ்ந்தமை அறியத்தக்கது.

உரை:2

'சாதாரணமாக அவனை எண்ணத்தில் கொண்டு அழுதாலும் என்றுமே அவனை வேண்டித் தொழுதாலும் தன் உருவத்தை அவன் காட்ட மாட்டான். அஞ்சாதே இதோ வந்தேன் என்றும் சொல்ல மாட்டான். அப்படிப்பட்ட அவன் ஒருவன் என்னைத் தழுவி என்னுள் மூழ்கி என்னைச் சுற்றிச் சுழன்று என்னைவிட்டுப் போக மாட்டேன் என்று கிடந்தான். அவனை இப்போது காண முடியாமல் தவிக்கிறேன். இலைகளும் தழைகளும் சூழ்ந்த கானகத்தின் உள்ளே பசுக்களின் பின்னால் நெடிய மால் குழல் ஊதிக் கொண்டு வருவான். அந்தக் குழலில் துளைகளின் வழி அவன் வாய் நீர் வரும். அதனைக் கொண்டு வந்து என் முகம் குளிரத் தடவுங்கள்'

English Translation

I weep and pray; the fellow does not even show his face to say, “Fear not”, nor ever comes to caress, embrace, roll and leave. Grazing cows in the dense forest, he plays his flute endlessly. Go bring the trickle from its hole and wipe the fever from my brow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்