விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கஞ்சைக் காய்ந்த கருவில்லி*  கடைக்கண் என்னும் சிறைக்கோலால்* 
  நெஞ்சு ஊடுருவ வேவுண்டு*  நிலையும் தளர்ந்து நைவேனை* 
  அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்*  அவன் மார்வு அணிந்த வனமாலை* 
  வஞ்சியாதே தருமாகில்*  மார்விற் கொணர்ந்து புரட்டீரே* 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கஞ்சை - கம்ஸனை
காய்ந்த - தொலைத்தவனாயும்
கரு வில்லி - பெரியவில் போன்ற புருவத்தையுடைனாயு மிருக்கிற கண்ணபிரானுடைய
கடைக்கண் என்னும் - கடைக்கண்ணாகிற
சிறை கோலால் - சிறகையுடைய அம்பாலே

விளக்க உரை

உரை:1

கம்ஸனைக் கொண்றொழித்தவனும் சார்ங்கவில்போன்ற திருப்புருவங்களையுடையனுமான கண்ணபிரானுடைய கடாக்ஷங்களிலே நான் மிகவும் ஈடுபட்டு ஆற்றமாட்டாமல் நிலை தளரந்துபோக நின்றேன், இப்படிப்பட்ட நிலைமையில் வேறு உதவியொன்றுஞ் செய்யாமற்போனாலும் “நானிருக்கிறேன், பயப்படாதே“ என்றொரு வாய்ச்சொல்லாவது சொல்லலாமே அவன், அதுவும் சொல்லக் காணோம் நீங்களாவது அவனிடஞ்சென்று என்பரிதாப நிலைமையை விண்ணப்பஞ்செய்து அவனையே ஸகாக்ஷாத்தாக இங்கு அழைத்துவர முடியாமற் போனாலும் அவன் திருமார்பிலே சாத்திய வனமாலையையாவது கொடுக்குமாறு கேளுங்கள் அவனும் அதனை வஞசியாமல் கொடுத்தருளினானாகில் கொணர்ந்து நெஞ்சூடுருவ வேவுண்ட எனது நெஞ்சில் தாபம் ஆறும்படி மார்பிலே புரட்டுங்கள் என்கிறாள். கஞ்சன் என்றசொல் இங்கே கஞ்சு எனச் சிதைந்து கடக்கிறது. காய்ந்த - காய்தல் - கோபித்தலாய், அதன்காரியமான முடித்தலைச்சொல்லுகிறது, கம்ஸனைமுடித்த -என்றதாயிற்று. கருவில்லி “வில் போன்ற புருவத்தை யுடையவன்“ சொல்லியிருப்பது - முற்றுமை. இதனை வடநூலார் அலங்கார ஸாஸ்தரத்தில் ரூபகாதிசயோக்தி என்பர்.

உரை:2

'கஞ்சனைக் கொன்ற கருநிற வில்லைப் போன்றவன் தன் கடைக்கண் என்னும் அம்பினால் என் நெஞ்சினை ஊடுருவ நான் அதன் வெம்மையால் வேவுண்டு என் நிலையும் தளர்ந்து வாடுகிறேன். அஞ்சேல் இதோ வந்து விட்டேன் என்று கூறாத அந்த ஒருவன் என்னை வஞ்சித்தது போல் உங்களையும் வஞ்சிக்காமல் அவன் தன் மார்பில் அணிந்த வனமாலையைத் தருவானாகில் அதனை கொண்டு வந்து என் மார்பில் புரட்டுங்கள்'

English Translation

The demon killer Krishna, with his bow-like eyebrows and arrow-sharp gaze, has pierced and seared my bosom; alas, my spirit is ebbing. He does not show himself and say, “Fear not”. If he parts with his Vanamala, without playing false, bring it here and rub it on my chest.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்