- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
புதிதாகவந்த சிலபெண்பிள்ளைகள் ஆண்டாளுடைய அதிமாத்ரமான வைவர்ணியம் முதலியவற்றை உற்றுநோக்கி ‘அம்மா! உனக்கு இந்தவிகாரங்களெல்லாம் என்றைக்குத்தீரும்? என்னசெய்தால் தீரும்? பலவகைப்பட்டவிகாரங்களை அடைந்திட்டாமே, என்னசெய்தாலும் இந்தவிகாரங்கள் தீரமாட்டாதவை போலிருக்கின்றனவே!, உனக்கேற்ப ஏதாகிலுமுபாயம் தெரிந்தால் சொல்லிகாண்‘ என்ன, ‘கண்ணபிரானுடைய திருத்துழாய்மாலையைக் கொண்டுவந்து சூட்டினால் இவ்விகாரங்களெல்லாம் தணிந்துவிடும் என்று இவள் சொல்ல, அவனுடைய திருத்துழாய்மாலை எங்கள் கையில் எளிதாகக் கிடைக்குமோ? அதனை நாங்கள் எங்ஙனே கொண்டு வரக்கடவோம்? என்று அப்பெண்கள் திகைத்து நிற்க, அஃது அரிதாகில் என்னை அப்பெருமானது திருவடிவாரத்திலேகொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்‘ என்கிறாள். பலராமனாற்செய்யப்பட்ட ப்ரலம்பாஸுரவத்தைக் கண்ணபிரான்றானே செய்தருளியதாகக் கூறுதலுமுண்டு, தேனுகன் பிலம்பன் காளியனென்றும் “கருளுடைய பொழில்மருதுங் கதக்களிறும் பிலம்பனையுங் கடியமாவும்“ என்ற பெரியாழ்வார் திருமொழிகாண்க. உண்மையில் பலராமன் செய்த இச்செய்தியைக் கண்ணபிரான் செய்ததாகக் கூறுதல் ஒற்றுமை நயம் பற்றியாம். ஸ்ரீராமாவதாரத்தில் இளையபெருமாள் செய்த சூர்ப்பணகா பங்கத்தை ஸ்ரீராமபிரான்தானே செய்ததாக ஆழ்வார்கள் அநுஸந்திப்பதும் இங்ஙனமேயாம். “சூர்ப்பணகாவைச் செவியொடுமூக்கு அவளார்க்க வரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற“ இத்யாதிகள் காண்க.
English Translation
My paleness, depression, insensibility, white lips, loss of appetite, sleeplessness and sulkiness-all these will disappear, when the Tulasi garland worn by the Lord is wreathed on me. So take me to Bhandiravata, where his brother vanquished Pralamba by parting the thighs of the demon.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்