விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்*  தனிவழி போயினாள்!' என்னும்சொல்லு* 
  வந்த பின்னைப் பழி காப்பு அரிது*  மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்* 
  கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்*  குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற* 
  நந்தகோபாலன் கடைத்தலைக்கே*  நள்இருட்கண் என்னை உய்த்திடுமின்*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தந்தையும் - “தகப்பனாரும்
தாயும் - தாய்மாரும்
உற்றாரும் - மற்றுமுள்ள உறவினரும்
நிற்க - இருக்கும்போது
தனி வழி - (இவள்) தான்தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்“ என்கிற வார்த்தையானது

விளக்க உரை

தாய் தகப்பன்மார் சுற்றத்தார் முதலானோர் இருக்கும்போது, அவர்களைக்கொண்டு தனக்குற்ற நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டியது தகுதியாயிருக்க, ஒருபெண்பிள்ளை அவர்களையெல்லாம் திரஸ்கரித்துவிட்டுத் தான்றோன்றியாகத் தானே புறப்பட்டாள் என்று சிலர் பழிக்கத் தலைப்படுவர்க் அப்பழியானது என்னளவிலே நில்லாமல் இக்குடிக்கே பெருத்த பழிப்பாய்த்தலைக்கட்டும். அப்போது இப்பழியைப் பரிஹரிக்க நீங்கள் முயலாதிருக்கப்போகிறதில்லை. ஆனால் அப்போது உங்களுடைய முயற்சி பயன்படமாட்டாது. பழிவிளைவதற்கு முன்னே அதனைப் பரிஹ்ஹரிக்கப் பார்க்கவேணுமேயல்லது பழிவிளைந்து பரவினபின்பு அது பரிஹரிக்கப்போமோ? பழிவிளைவதற்கு ப்ரஸக்தியில்லாமல் அடங்கியிருக்க என்னால் முடியிவில்லை, இப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் செய்யத்தக்கது யாதெனில், தான்தோன்றியாய் நானாகப்படி கடந்து புறப்பட்டுப்போனேனென்கிற வார்த்தைக்கு அவகாஸமில்லாதபடி என்னை நீங்களாகவே விரும்பி அழைத்துக்கொண்டுபோய்க் கண்ணபிரானருகில் சேர்த்துவிடுங்கள், அப்படிச் செய்யுமளவில் என் மநோரதமும் நிறைவேறி நானும் வாழ்ந்தேனாகிறேன், நீங்களும் புகழ்பெற்றுப் போகிறீர்கள். பழிக்க நினைப்பார்க்கும் அவகாஸமில்லாமே போகிறது. இந்த ஔசித்யத்தை நீங்கள் நன்று கண்டறிந்து இப்படிச் செய்து முடிப்பீர்களென்று நம்பியே நான் விரைந்து புறப்படாதே நிற்கின்றேன் என்கிறாள்.

English Translation

They say I have strayed from the trodden path discarding mother, father, kith and kin I cannot guard against slander anymore-the stranger’s face haunts me everywhere. In the dead of the night, leave me at the portals of Nanda’s mansions, where broken hearted maidens lie groaning while the son plays with them ruining their reputation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்