- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பெண்ணே! நீ ஆயிரந்தான் சொல்லு, உன்னுடைய துணிவு உகக்கத்தக்கதாகமாட்டாது. நீ படிதாண்டாப் பத்தினியாயிருக்க வேண்டியவள், படி கடந்து நீ செல்லுமளவில் அவ்வெம்பெருமானுக்கு அது பெருத்த அவத்யமாய் முடியும். ப்ரபந்நஸந்தானத்திலே இப்படியுமொருத்தி கிளம்பினாளே‘ என்று ஊராரும் பழிக்கநேரிடும், இதெல்லாம் உனது பெண்மை நிறைவுக்குப் பாங்கல்ல, உன்ஸ்வரூபத்தை நீ காத்துக்கொள்ள வேண்டாவா?“ என்று தாய்மார் சொல்ல, அவர்களை நோக்கிக் கூறுகின்றாள் - நான் முறை கெட்டபடியை இனிமேலா ஊரார் அறியப்போகிறார்கள்? என்றைக்கோ அறிந்த விட்டார்கள்! இனிமேல் அறியவேண்டும்படி இங்கு ஒன்றும் ரஹஸ்யமாயிருக்கவில்லை, ஏழூர்ப்புல்லையும் மேய்த்து எட்டூர்த் தண்ணீரையுங் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றதன்றோ எனது நிலை, இனி நாம் ஆர்க்கு லஜ்ஜைப்பட வேணும், லஜ்ஜைப்பட்டுத்தான் பெறவேண்டியது என்ன இருக்கிறது.
English Translation
No use fighting shy, now all the folks have come to know. If at all you wish to do me good, --I swear, --if at all you want to see me alive, take me now to Ayppadi. If I see the beautiful bachelor who took the Earth, I may live.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்