- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானை இப்போதே பெறவேணுமென்று வருந்திக்கிடக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் அன்னையரும் ‘அம்மா! நம் தலையால் ஆவதொன்றுமில்லை, பேறு அவன் தலையாலே ஆகவேணும் என்பது ஸித்தாந்தமான பின்பு நீ இப்படிப்பதறுவதில் பயனொன்றுமில்லையே, அடைவிலேபேறு பெறலரகுமென்று ஆறியிருப்பதன்றோ முறைமை, அஸோக வநிகையிற் பிராட்டியின் அத்யவஸாயம் உனக்குத் தெரியாததன்றோ, அவளைப்போலே நீயும் ஆறியிருக்கவேணுங்காண், நீ இப்படிப் பதறலாகாது‘ என்றாற்போலே சிலஹிதவசநங்களைச் சொல்லப்புக, அவர்களைக்குறித்துக் கூறுகின்றாள் - ‘எனக்கு இப்போது நிகழ்கிற அவஸ்தை இப்படிப்பட்டதென்று சிறிதும் அறிபகில்லாத நீங்கள், பகவத்விஷய காமத்தின் மேலெல்லையிலே நிற்கிற எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என்காதில் புகவும்மாட்டா, புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி வுறுமளவிலே நான் நிற்கின்றிலேன், ஆகையாலே நீங்கள் எனக்குஹிதஞ் சொல்லப்பார்ப்பதை நிறுத்திவிட்டு * ஒருத்திமகனாப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்த்து சாணுர முஷ்டிகாதிமல்லர்களோடே போர்புரிந்து, வெற்றி பெற்ற கண்ணபிரானெழுந்தருளி யிருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள்‘ என்கிறாள்.
English Translation
Your advices to me on my affair with Madavan are like words spoken by the mute to the deaf. Leaving his parents, did he not grow up in another household? Take me then to Mathura, where he wrestled in an unfair match.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்