- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தமக்கு மேற்பட்டாரொருவருமில்லாதபடி பரமபுருஷராயிருக்கும்வரை ஒருமானிடப் பெண்ணாகிய நீ இப்படியெல்லாஞ் சொல்லுவது தகுதியோ? அவருடைய மேன்மை எங்கே? உன்னுடைய கீழ்மை எங்கே? இதை ஆராயாமல் நீ அப்பெரியவரைப் பழிப்பது சிறிதும் பொருந்தாது என்று சிலமாதர்கள் ஆண்டாளைநோக்கிக் கூற, அதற்கு மறுமாற்றா முரைக்கின்றாள். அப்பெரியவர் ராமாவதாரத்தில் பட்டபாடுகள் தெரியாதா? ஒரு பெண்பெண்ட்டியின் உடம்பிலே ஆசைகொண்டு அந்த ஆஸாபாஸ பாரவஸ்யத்தாலே ஊணுமின்றி உறக்கமுமின்றி அவளுடைய பிரிவுக்கு ஆற்றாமல் நோவுபட்டு வானரப்படைகளைத் துணைகொண்டு கடலிலே அணைகட்டுகையாகிற அருந்தொழிலைச் செய்து இப்படிகளாலே தாம் வெளிப்படுத்திய பைத்தியத்தை ஸ்ரீராமாயணம் நடையாடுந் தேஸத்திலே அறியாதாருண்டோ? “***“ (அநித்ரஸ்ஸததம்ராம) என்றுமு, “***“ (ந மாம்ஸம் ராகவோபுங்க்தே நசாபி மது ஸேவதே) என்றும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லையா? பரமபுருஷராயிருப்பவர் ஒரு பெண்ணுக்காக அப்பாடுபடலாமோ? அது அவருடைய மேன்மைக்குத் தகுமோ? அது தகுமாகில், எனக்காகவும் அவர் அப்பாடுபட்டிருக்க வேண்டாவோ? என்னிடத்தில் மாத்திரமேயோ அவர் மேன்மை பாராட்டி யிருக்கவேணும்? என்கிறாள். தாமுற்ற பேதெல்லாம் என்றவிடத்தில், ஸுக்ரீவனைச் சரணமடைந்தது ஸமுத்ரராஜனைச் சரணமடைந்தது முதலிய மற்றுள்ள இழிவான செயல்களும் அநுஸந்திக்கத்தக்கவை. பெண்ணாக்கையாப்புண்டு என்றவிடத்து, “ஒருபெண் கொடியாலே கண்டுண்டு“ என்ற வியாக்கியான ஸூக்தி நோக்கத்தக்கது.
English Translation
The Lord of high-walled Arangam, who prides in his dignity, gave up sleep and food to tame the ocean, for the sake of his woman. Has he forgotten the madness that came over him then?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்