விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைப் பொருள்கள் முன்னமே*  கைக்கொண்டார்* 
    காவிரிநீர் செய்ப் புரள ஓடும்*  திருவரங்கச் செல்வனார்* 
    எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்*  எய்தாது*
    நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்*  என் மெய்ப்பொருளும் கொண்டாரே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காவிரி நீர் - காவேரியினி தீர்த்தமானது
செய்புரளஓடும் - பயிர்நிலங்களிலெலாம் ஓடிப்புரளும்படியான நீர்வளம்மிகுந்த
திரு அரங்களம் - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கிற
செல்வனார் - ஸ்ரீமானாயும்,
எம்பொருட்கும் நின்று - எல்லாப்பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று
 
 

விளக்க உரை

எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியா யிருந்துகொண்டு ஒருவர்க்கும். கைப்படாமல் வேதவேத்யராயிருக்கும் பெரியபெருமாள் என்கையிலுள்ள பொருள்களை முன்னமே கைக்கொண்டார், கடைசியாக ஸரீரமென்கிற ஒருவஸ்து மிகுந்திருந்தது, அதையும் கொள்ளைகொண்டாரென்கிறாள். “கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூத்தி பரமபோக்யமானது - “இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்த்திறே பகவத்ஸம்பந்தம், * ஸ்ருஷ்ட ஸ்த்வம் வநவாஸாப போலே பிறக்கிறபோதே வளையிழந்து கொண்டுபோலே காணும் பிறந்தது.“ காவிரிநீர்செயப்புரளவோடும் திருவரங்கம் - அசேதநமான தீர்த்தமுங்கூட ரக்ஷ்யவாக்கம் வாடாமல் நோக்கும் தேஸம் என்றபடி. அசேதநமர்ன வஸ்துக்களும் தங்கள் தங்கள் ரக்ஷ்யவர்க்கங்களை நோக்குமிடமான திருவரங்கத்திலே வாழப்பெற்ற பரமசேதநன் ரக்ஷ்யகோடியிலே ஒருத்தியான என்னை நோக்காதிருப்பது தகுதியன்று என்று குறிப்பித்தபடி.

English Translation

The wealthy Lord of Arangam watered by the Kaveri, is the substance of the Vedas, present in all, evading all. He already took from me all I had. Now he is taking my soul as well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்