- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மற்றபேருடைய கைகளில் வளைஇருக்க உன்கை வளைகளை மாத்திரம் எம்பெருமான் கொள்ளைகொண்டது உன்னிடத்துள்ள அன்பு மிகுதியாலன்றோ ஆகவே, அதற்கு நீ மகிழவேண்டியிருக்க ஸோகிக்கலாமோ? என்று சிலபெண்கள் ஆண்டாளை நோக்கிக் கூற, அவர்களை நோக்கிக் கூறுகின்றாள். மச்சுக்களாலே அலங்கரிக்கப்பட்ட மாடங்களையும் மதிள்களையுமுடைத்தான திருவரங்கம் பெரியகோயிலிலேவந்து நம் உடைமையைப் பெறுகைக்குத்தாம் அர்த்தியாய்க் கண்வளர்ந்தருள்பவராய்ப் பசுகுபசுகென்று ஆகர்ஷகமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையரான பெரியபெருமாள் முன்பு தாம் மஹா பலியிடத்திலே யாசகராக எழுந்தருளி அவனிடத்தில் உதகதாராபூர்வகமாக பிக்ஷைவாங்கிக் கொண்ட பிச்சையில் குறையுண்டாகி அக்குறையை என்கையாலே தீர்த்துக்கொள்வேணுமென்ற ஆவலுடையவராய் என் கைவளையிலே ஆசையுடையவராகில் அஸுரனுடைய யஜ்ஞபூமியிலே நடந்தநடையை இத்தெருவை என்கண்வட்டத்திலே நடந்துகாட்டலாகாதோ? என்கிறாள். பச்சைப்பசுந்தேவர் - “மேகஸ்யாமம்“ என்றபடி பசுமைநிறம்மிக்க பெருமாள் என்றவாறு. அன்றியே, “பச்சைப்பசும்பொய்“ என்றால் மெய்கலசாதபெய் என்று பொருளாகிறப்போலே ‘கீழ்மைகலசாத மேன்மையுடையவர்‘ என்றும்பொருளாம். கலப்பற்ற பரதேவதை.
English Translation
The Lord of tall-mansioned Arangam came a begging as a celibate lad. Not satisfied with what he got as charity, if he desires my bangles also, should he not pass through this street?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்