விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மழையே! மழையே! மண் புறம் பூசி*  உள்ளாய் நின்று* 
    மெழுகு ஊற்றினாற் போல்*  ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற* 
    அழகப்பிரானார் தம்மை*  என் நெஞ்சத்து அகப்படத் தழுவ நின்று*
    என்னைத் ததைத்துக்கொண்டு*  ஊற்றவும் வல்லையே?*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மழையே மழையே! - ஓ மேகமே!
புறம் - மேற்புறத்திலே
ஊற்றும் - என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கியழிப்பவராய்.
நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் தம்மை - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகியபெருமாளை
மண் பூசி - மண்ணைப்பூசிவிட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல் - உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கிவெளியில் தள்ளுமாபோலே

விளக்க உரை

விண்ணீலமேலாப்பிலேகண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு விகாஸத்தோடும் விலாஸத்தோடும்கூடிக் கிளர்ந்த பதார்த்தங்களை நோக்கி வார்த்தை சொல்லிக்கொண்டு வந்து ஆண்டாள் இப்போது பழையபடியே மேகங்களைவிளித்துக் கூறுகின்றாள் - ; மேகங்களானவை சிலபதார்த்தங்களை உத்தீபங்களாகக் கிளப்பி அவற்றின் வழியாலே நலிந்தது போதாமல் பின்னையும்விடாதேநின்று வர்ஷித்து ஸாக்ஷாத்தாகவும் நலியத் தொடங்கினபடியாலே அவற்றை நோக்கிக் கூறுகின்றன்ளென்க. மழைபொழிதலும் விரஹிகளுக்கு உத்தீபகமிறே. இப்பாட்டில் அந்தபரம்பரையாக மூன்று எழுத்துப்பிழைகள் நெடுநாளாகவே நேர்ந்திருக்கின்றன. முதலடியின் முடிவில் “உள்ளாய்நின்று“ எனவும் இரண்டாமடியின்முடிவில் “வேங்கடத்துள்நின்று“ எனவும் ஈற்றடியின் முதலில் “தழுவிநின்று“ எனவும் பெரும்பாலும் பண்டிதபாமா விபாகமற அளைவராலும் ஓதப்பட்டுவருகின்றது. மூலப்பதிப்புகள் எல்லாவற்றிலும் இப்பிழைகள் உள்ளன. அடைவே, “உள்ளாய்நின்ற“ எனவும், “வேங்கடத்துள் நின்ற“ எனவும்; “தழுவநின்று“ எனவும் திருத்திக்கொள்க. கோயில் பத்தராவிஸ்வாமி இப்பிழைகளைக் குறிப்பாக எடுத்துக்காட்டினர்.

English Translation

The Beautiful Lord has emptied me, --like a metal caster casing his model with clay, and melting out the wax inside. O Dark rain-clod, passing over Venkatam! Would you pour over me and cast his image in my heart forever?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்