- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘உங்கள் கூத்தைநிறுத்துங்கள்‘ என்று மயில்களின் காலிலே இவள் விழுந்து வேண்டிக்கொள்ளவே, அம்மயில்கள் இவளுடைய எளிமையை நன்று தெரிந்து கொண்டு ‘இவளுக்கு நாம் அநிஷ்டமானதைச் செய்தால் நம்மை இவள் தண்டிப்பளோவென்று நாம் அஞ்சவேண்டா; இவள் புகலற்றுக்கிடக்கின்றான்; இவளை நாம் எப்படி ஹிம்ஸித்தாலும் கேட்பாரில்லை என்று எண்ணி முன்னிலும் அதிகமாகத் தோகைகளை விரித்துக் கூத்தாடத்தொடங்கின; அவற்றை நோக்கி மீண்டும் தன் அவஸ்தையை முறையிட்டுக்கொள்கிறாள். நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள் - தோகைவிரித்து நடமாடுகின்ற மாமயில்காள்! என்க. உள்ளபழயே அந்வயிப்பதும் ஒக்கும். (உம்மை இத்யாதி) கண்ணுடையவர்கள் உங்கள் கூத்தைக் கண்டால் பரமாநந்தம் பெறுவர்கள் என்பதில் தட்டில்லை; கண் இழந்திருக்கிற நான் உங்கள் கூத்தை எங்ஙனே காணவல்லேன்? முதல் இலேன் என்றது - காண்பதற்கு முக்யஸாதநமான கண்ணையுடையேனல்லேன் என்றபடி. “என்ஐம்புலனும் எழிலுங்கொண்டு“ என்றபடி எல்லா இந்திரியங்களையுங் கொள்ளை கொண்டானிறே எம்பெருமான்.
English Translation
O Good Peacocks spreading your feathers in preparation for another dance! This sinner self has nothing to give you for your performance. The pot-dancer Govinda has plundered my all, and left me a pauper. Now is it proper for you to dance?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்