விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சந்தொடு காரகிலும் சுமந்து*  தடங்கள் பொருது* 
    வந்திழியும் சிலம்பாறு*  உடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனைச்*
    சுரும்பு ஆர் குழற் கோதை*  தொகுத்து உரைத்த* 
    செந்தமிழ் பத்தும் வல்லார்*  திருமாலடி சேர்வர்களே* (2)     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சந்தொடு - சந்தனக்கட்டைகளையம்
கார் அகிலும் - காரகிற்கட்டைகளையும்
சுமந்து - அடித்துக்கொண்டு
தடங்கள் பொருது வந்து - பலபலகுளங்களையுமு அழித்துக் கொண்டுஓடிவந்து
இழியும் - பெருகுகின்ற

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைகட்டுகிறாள் பிறந்தகத்தில் நின்றும் புக்கத்துக்குப் போம் பெண்கள் வேண்டிய தனங்களைக் கொண்டுபோமாபோலே சந்தனமரங்களையும் காரகில் மரங்களையும் வேரோடே பறித்து இழுத்துக்கொண்டு, வழியிடையே உள்ள பலபல தடாகங்களையும் அழித்துக்கொண்டு பெருவேகமாக வந்து ப்ரவஹியா நின்ற சிலம்பாற்றையுடைய திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவரான அழகர் விஷயமாகச் சுரும்பார் குழற்கோதை யருளிச்செய்த இப்பத்துப் பாட்டையும் ஓதவல்லவர்கள் தன்னைப் போலே வருந்தாமல் ஸுகமாகத் திருமாலின் திருவடித்தாமரைகளை யணுகி நித்ய கைங்கரிய ஸம்பத்துடனே வாழப்பெறுவர்கள் - என்றாளாய்ந்து. சந்து - ‘சந்தனம்‘ என்ற வடசொற் சிதைவு. தடங்கள்பொருது - தடம் என்று கரைக்கும் பெயராகையாலே, இருகரையையும் அழித்துக்கொண்டு என்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. “ஒருமத்த கஜம் கரைபொருதுவருமா போலே“ என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.

English Translation

These decad of pure Tamil verses by bee-humming flower-coiffured Goda, on the Lord residing in Malirumsolai amid lakes, where the raging Nupura Ganga washes Sandal and Rosewood, --those who can sing it will surely attain the feet of Tirumal.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்