விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோங்கு அலரும் பொழில்*  மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல்* 
    தூங்கு பொன் மாலைகளோடு*  உடனாய் நின்று தூங்குகின்றேன்* 
    பூங்கொள் திருமுகத்து*  மடுத்து ஊதிய சங்கு ஒலியும்* 
    சார்ங்க வில் நாண் ஒலியும்*  தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ!*       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோங்குஅலரும் பொழில் - கோங்கு மரங்கள் மலரப் பெற்றசோலைகளையுடைய
மாலிருஞ் சோலையில் - திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல் - கொன்றைமரங்களின் மேல்
தூங்கு - தொங்குகின்ற
பொன்மாலைகளோடு உடனாய் நின்று - பொன் நிறமான பூமாலை களோடுஸமமாக

விளக்க உரை

இப்பாசுரத்தின் கருத்து மிகவும் ஆழ்ந்தது. திருமாலிருஞ் சோலைமலையிற் கொன்றை மரங்களின்மீது தொங்குகின்ற கொன்றைப்பூ மாலைகளோ டொப்ப நானும் தூங்குகின்றேன் என்று கூறுகின்ற ஆண்டாளுடைய கருத்து யாதெனில்; - கேண்மின்; திருமாலிருஞ்சோலைமலையில் ஸாத்விக புருஷர்கள் ஏறிப்போவர்களேயன்றி ராஜஸ தாமஸ புருஷர்கள் ஏறிப்போகமாட்டார்கள். கொன்றைமலர்கள் சிவன் முதலிய தேவதாந்தரங்களின் ஆராதனைக்கு உபயோகப்படக்கூடியவை யாதலால் அம்மலர்கள் ராஜஸ தாமஸ புருஷர்கட்கு உபயுக்தமாகுமேயன்றி ஸாத்வித புருஷர்கட்கு அவைகொண்டு பயனில்லை. இனி ஸாத்விகமாத்ரப்ராப்யமான திருமாலிருஞ் சோலைமலையில் மலர்கின்ற கொன்றை மலர்கட்கு ஏதாவது உபயோகமுண்டோவென்று சிந்தித்தால், அவை அங்கே மலர்ந்து அங்கே வீழ்வதொழிய வேறொருபயோகமும் அவற்றுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும். ஆகவே, அம்மலர்களின் ஜன்மம் எப்படி விணோ அப்படியே என் ஜன்மமும் வீணாயிற்றே! என்கிறாள். “தாமஸ புருஷர்கள் புகுரும் தேஸமன்று, ஸாத்விகர் இதுகொண்டு காரியங்கொள்ளார்கள், பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவதரஹமான வஸ்து இங்ஙனே இழந்திருந்து க்லேஸப்படுவதே!“ என்ற விடாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையை நோக்குமின்.

English Translation

Amid the Kongu trees that blossom in Malirumsolai, I lie in a vain, drooping like strings of the Konrai flower. When, O When will I hear the twang of his Sarnga bow, and the boom of the conch blowing on his sweet lips?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்