விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காலை எழுந்திருந்து*  கரிய குருவிக் கணங்கள்* 
    மாலின் வரவு சொல்லி*  மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ* 
    சோலைமலைப் பெருமான்*  துவாராபதி எம்பெருமான்* 
    ஆலின் இலைப் பெருமான்*  அவன் வார்த்தை உரைக்கின்றதே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரிய குருவி கணங்கள் - கரியகுருவிக் கூட்டங்கள்
காலை - விடியற்காலத்திலே
எழுந்திருந்து - எழுந்து,
சோலைமலை பெருமான் - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராவதி எம்பெருமான் - த்வாரகர் புரிக்குத் தலைவனாயும்

விளக்க உரை

ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே மிக்கிருக்கு மாதலால் சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை ஸூசிப்பித்துச் சொல்லுவதுமா யிருக்கவே, அதுகண்ட ஆண்டாள் இது மெய்யாய்த் தலைக்கட்டுமோ பொய்யாய்விடுமோவென்று சிந்திக்கிறாளாய்த்து. மெய்ம்மை கொலோ? என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்தாகலாம். நம்முடைய சித்தவிப்ரமத்தால் இவை பாடுகின்றனவாகத் தோற்றுகின்றதா? அல்லது மெய்கவே பாடுகின்றனவா? என்பது ஒரு கருத்து; இக்கரிய குருவிக்கணங்கள் இதற்கு முந்தியும் பலகால், மாலின் வரவுசொல்லி மருள்பாடியும் அவ்வெம்பெருமான் வரக்காணாமையினாலே இதுவரையில் இவற்றின் பாட்டு பொய்யாயொழிந்தது, இப்போதாவது அங்ஙனன்றி மெய்யாகத் தலைக்கட்டுமா; என்பது மற்றொரு கருத்து.

English Translation

Flocks of blackbirds spoke as I woke up this morning, about the Lord of mountain groves, about the King of Dvaraka, about the Lord who slept on a fig leaf in the deluge. Their sweet Marul tune seemed to foretell his coming; could it be true?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்