விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  துங்க மலர்ப் பொழில் சூழ்*  திருமாலிருஞ்சோலை நின்ற* 
  செங்கண் கருமுகிலின்*  திருவுருப் போல்*  
  மலர்மேல் தொங்கிய வண்டினங்காள்!*  தொகு பூஞ்சுனைகாள்!* 
  சுனையிற் தங்கு செந்தாமரைகாள்!*  எனக்கு ஓர் சரண் சாற்றுமினே*       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

துங்கம் மலர் பொழில் சூழ் - ஓங்கின மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த
திருமாலிருஞ் சோலை - திருமாலிருஞ்சோலையில்
நின்ற - நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கிற
செம் கண் கருமுகிலின் - செந்தாமரை போன்ற திருக்கண்களையும் காளமேகம் போன்றவடிவையுமுடைய எம்பெருமானுடைய
தி உருபோல் - அழகிய வடிவம்போலே

விளக்க உரை

திருமாலிருஞ்சோலைமலைப் பொழில்களில் மலர்ந்துள்ள பூக்களில் தங்குகின்ற வண்டுகளும் சுனைகளும் அழகருடைய திருவுருவை நினைப்பூட்டி நலிவதனாலும், சுனைகளில் அலர்ந்த செந்தாமரை மலர்கள் அவருடைய திவ்யாவயவங்களுக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஹிம்ஸிப்பதனாலும் அந்த ஹிம்ஸையைப் பொறுக்கமாட்டாத ஆண்டாள் அவற்றை நோக்கி ‘அந்தோ! நான் உங்களுக்குத் தப்பிப் பிழைப்பதொரு உபாயம்சொல்ல வல்லீர்களோ?‘ என்கிறாள். துங்கம் - வடசொல். கருமுகில் - முற்றுவமை, “தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே“ என்றாற்போல. சுனை - நீர்நிலை. சரண் - ஸரணம்.

English Translation

O Dark beetles sitting on blossoms over tall groves! O Deep lakes! O Red lotuses of the lake! You haunt me with the dark hue and the lotus-eyes of my Lord. Pray show me a place to escape to.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்