விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்!*  ஒண் கருவிளைகாள்* 
    வம்பக் களங்கனிகாள்!*  வண்ணப் பூவை நறுமலர்காள்* 
    ஐம் பெரும் பாதகர்காள்!*  அணி மாலிருஞ்சோலை நின்ற* 
    எம்பெருமானுடைய நிறம்*  உங்களுக்கு என் செய்வதே?*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பை பொழில் வாழ் - பரந்த சோலையில் வாழ்கின்ற
குயில்காள் - குயில்களே!
மயில்காள் - மயில்களே!
ஒண் கருவிளைகாள் - அழகிய காக்கணம் பூக்களே!
வம்பக் களங்கனிகாள் - புதிய களாப்பழங்களே!

விளக்க உரை

குயில், மயில், கருவிளை, களங்கனி, காயாம்பூ என்னும் இவ்வைந்து வஸ்துக்களையும் பஞ்சமஹாபாதகிகள் என்கிறாள். பொற்களவு, கள்குடித்தல் முதலிய மஹத்தான ஐந்துபாதகஞ் செய்தவர்களைப் பஞ்சமஹாபாத்திகள் என்கிறாய்த்து. இவை தனக்குப் பொறுக்கவொண்ணாத ஹிம்ஸையைப் பண்ணுவதுபற்றி இங்ஙனம் கூறினளென்க. “பெரும்பர்தகர் - பெரியபாதகத்தைச் செய்பவர், பாதகம் - பாவம். அன்றி “பெரும்பாதகர்“ என்று - பெரிய ஸாயகர் என்றபடியுமாம். (பொறுக்கமுடியாத வேதனையை உண்டுபண்ணுமவர்கள் என்கை.) இங்கு இரட்டுறமொழிதலாகக் கொள்க. பரமசோதனை எம்பெருமானோடு, அற்பசேதநங்களான குயில்மயில்களோடு, அசேதநங்களான கருவிளை முதலியவற்றோடு வாசியற எல்லாவஸ்துக்களும் எனக்குத் தீங்குவிளைக்க ஒருப்பட்டால் நான் எங்ஙனே பிழைக்கும்படி?; அவன் பிரிந்துபோன மையத்தில் முகங்காட்டி என்னைத் தேற்ற வேண்டியவைகளும் பாதகங்களானால் நான் எங்ஙனம் பிழைக்கவல்லேன்?; பிரிந்தவன் ஒருவனாய், பாதகங்கள் பலவானால் பிழைக்கமுடியுமோ? என்கிறாள் போலும்.

English Translation

O Beautiful Koels of the groves! O Beautiful Peacocks! O Dark Karuvilai flowers! O Fresh Kala fruit! O Kaya flowers! O Five-fold-sinners of Malirumsolai, the five of you! What good to you get by sporting the Lord’s dark hue?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்