விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாகத்தின் அணையானை*  நன்னுதலாள் நயந்து உரை செய்* 
    மேகத்தை வேங்கடக்கோன்*  விடு தூதில் விண்ணப்பம்* 
    போகத்தில் வழுவாத*  புதுவையர்கோன் கோதை தமிழ்* 
    ஆகத்து வைத்து உரைப்பார் *  அவர் அடியார் ஆகுவரே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் நுதுலாள் - விலக்ஷணமான முகத்தை யுடையளாய்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை - பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
நாகத்தின் அணையான் வேங்கடக்கோனை - திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனான திருவேங்கட முடையானை
நயந்து - ஆசைப்பட்டு
உரை செய் - அருளிச்செய்ததாய்.

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலன்சொல்லித் தலைக்கட்டுகிறாள் இப்பாட்டில். வேண்டினபடியெல்லாம் பகவதநுபவத்தைப் பெற்று மகிழ்ந்தவரான பெரியாழ்வார்க்குத் திருமகளாகப் பிறக்கப்பெற்றதுவே ஹேதுவாகத் தான் எம்பெருமானை விரும்பப்பெற்றாள் என்னுமிடம் தோற்றப் போகத்தில் வழுவாத புதுவையர்கோன்கோதை என்கிறாள். நன்னுதலாள் - முகத்தைப் பார்க்கும் போதே ‘இவள் பகவதநுபவத்தில் விலக்ஷண‘ என்னத்தக்க வீறுடையவள் என்றபடி. “நயந்து உரைசெய் விண்ணப்பம்“ என்று அந்யம். “மேகத்தை வேங்கடக்கோன் இல் தூதுவிடு விண்ணப்பம்“ என்று அந்வயிக்கலாமென்பர் அழகிய மணவாளச்சீயர் இல் - இடம். ஆகத்துவைத்து உரைக்கையாவது - ‘ஒருத்தி பகவத்விஷயத்திலே ஆசை வைத்து என்ன பாடுபட்டாள்!‘ என்று உருக்கத்தோடே அநுஸந்திக்கையாம் அடியாராகுவரே - ஆண்டாள் மேகத்தைத் தூதுவிட்டு வருந்தினதுபோல அவாகள் வருந்தவேண்டா, இவள் தூதுவிட்டதுவே ஹேதுவாக இவள்பெற்ற பேற்றை அவர்களும் எளிதிற்பெறுவார், தமது திருமொழியில் தாம் விரும்பினபடியெல்லாம் குறையற அநுபவிக்கப் பெற்றாகையில் “போகத்தில் வழுவாத புதுவையர்கோன்“ எனப்பட்டார்.

English Translation

These decad of love poems in Tamil, by faultless Puduvai King’s beautiful daughter Goda, sending the clouds as messengers to the Lord of Venkatam, -- those who sing it with feeling will become devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்