விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
    எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 
    குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
    அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வளை - வளைகளும்
சிந்தை - நெஞ்சும்
உறக்கத்தோடு - உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால் - என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு - என்னை உபேக்ஷித்துவிட்டு

விளக்க உரை

எம்பெருமானைப்பிரிந்துவிட்ட துக்கத்தினால் சரீர சோபைமாறி நிறமழிந்து வளைகழன்று நெஞ்சுதளர்ந்து உறக்கமொழிந்து இப்படியெல்லாம் நான் சீர்குலைந்து தடுமாறியிருக்குமிருப்பை என்சொல்லவல்லேனென்கிறாள் முன்னடிகளால். ஒளிவண்ணம் - ஒளிபொருந்தியவர்ணம் என்றுமாம். எம்பெருமானோடு ஸ்பஸ் லேஷிக்கப்பெறுங்காலத்தில் மேனிபுகர்ந்திருப்பதும் பிரிந்துபடுங்காலத்தில் “என் மங்கையிழந்தது மாமைநிறமே“ என்னும்படி வைவர்ணியப்பட்டிருப்பதும் மெய்யன்பர்களின் இலக்கணமாமென்க. மேனி மெலியவே வளைகளும் கழன்றொழியும், நெஞ்சும் உருக்குலையும். ளிமையால் - நான் பிராண நாதனால் உபேக்ஷிக்கப்பட்டுத் தனிமையாயத் தளர்ந்துகிடக்கிறேனென்பது காரணமாக ஒளிவண்ணம் வளைசிந்தையுறக்கங்கள் என்னைவிட்டு நீங்கின என்றபடி எளிபாரை எல்லாரும் கைவிடுவது ஸஹஜமே யன்றோ. ஆகவே, எளிமையால் என்றது - என்னிடத்துள்ள தைந்யம் காரணமாக என்றபடியாயிற்று. அன்றிக்கே, ஒளிவண்ணம் முதலியவை என்னை உபேக்ஷித்து விட்டுநீங்கினதற்கு காரணம் தங்களுடைய புன்மையேயாம், ஆபத்தை யடைந்தவர்களை விட்டுநீங்குமவர்கள் நீசர்களேயிறே - என்றதாகவும் கொள்ளலாம். இப்பக்ஷத்தில், எளிமையால் என்றது - தங்களுடைய நீசத்தன்மையினால் என்றபடியாம்.

English Translation

My luster, my colour, my bangles, my senses and my sleep, --how soon they have left me, alas, destroying my well-being! O Merciful clouds! How long must sustain my spirits, singing the glories of my Govinda, Lord of cool springs- Venkatam?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்