- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஓ காளமேகங்களே! நீங்கள் எனக்காக ஔதாரியத்தில் இன்று புதிதாகப் பரிசயம் பண்ணவேணுமோ? வள்ளல்தனமே இயல்பாக இருப்பவர்களன்றோ நீங்கள், விலையுயர்ந்த முத்துக்களையும் பொன்களையும் ஒருவரும் வேண்டாமலிருக்கத்தானே நீங்களே பொழிகின்றீர்களன்றோ. இப்படிப்பட்ட நீங்கள், அடிவீழ்ந்து வேண்டுகிற எனக்காக ஒருவாய்ச்சொல் நல்கலாகாதோ? திருவேங்கடமுடையானுடைய ஸமாசாரம் உங்களுக்குத் தெரியாமலிராதே ஏதாவது சொல்லலாகாதா? பிறர்க்குப் பொன்னையும் முத்தையும் பொழிகின்ற நீங்கள் எனக்கு ஒருவாய்ச்சொல் பொழிய அருமையோ? என்கிறாள் முன்னடிகளில். இவள் அப்படிக் கேட்டவளவிலும் அம்முகில்கள் இன்னஸமாசாரமுண்டென்று மறுமாற்றம் சொல்லப்பெறாமையாலே தனது ஆற்றமையின் கனத்தைச் சொல்லி வருந்துகின்றாள் பின்னடிகளில் - அவ்வெம்பெருமானிடத்து வைத்த காம்மாகிற தீயானது வெளியிலுள்ள அவயவங்களை நிஸ்ஸேஷமாக தஹித்துவிட்டு இரை காணாமல் உள்ளே புகுந்து தஹிக்க, தென்றற் காற்றானது அதற்குத் துணையாயிருந்துகொண்டு நோயை அதிகப்படுத்த இப்படி இரண்டின்கையிலும் அகப்பட்டுக்கொண்டு எத்தனைநாள் நான் தடுமாறிக்கிடப்பேனென்கிறாள்.
English Translation
O Great clouds raining precious pearls over Venkatam hills! What news from the Lord of dark Cloud-hue? Alas, scorched by the raging fire of mid-night passion, I stand and wait for the soothe cool breeze.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்