- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பெருஞ்செல்வம் படைத்த சங்கே! நீ அல்லும்பகலும் உண்கிற கண்ணபிரான் தன் வாயமுதமானது உனக்கொருவனுக்கே உரிமைப்பட்டதன்று, அக்கண்ணபிரானுக்கு வாழ்க்கைப்பட்ட பதினாறாயிரம் பெண்கள் இவ்வமுதத்தைப் பருகுவதற்குப் பங்குடையவர்கள். அன்னவர் இதனை அநுபவிக்க அவஸரம் பார்த்திருக்க நீ ஒருவனே மேல்விழுந்து புஜித்தால் அவர்கள் உன்னோடு பிணங்காதிருக்கமுடியுமோ? அவர்களுடைய மனவருத்தத்திற்கு நீ ஆளானாயாகில் உன்னை ஸாதுகோஷ்டியில் மதிப்பாருண்டோ? என்கிறாள். நரகாசுரன் தான் மணஞ்செய்து கொள்ளவேணுமென்று அங்கங்கிருந்து தெரிந்து பொறுக்கிக்கொண்டு வந்து திரட்டிவைத்திருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் கண்ணபிரான் அவ்வசுரனைக் கொன்றொழித்துத் தானே மணஞ்செய்துகொண்டான் னென்பது அறியத்தக்கது.
English Translation
While sixteen thousand godly beauties stand and wait, eager for their turn to enjoy the nectar of Madavan’s lips, you go and drink it up all alone. Will they not quarrel with you, O Good Conch?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்