- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இந்நிலவுலகத்தின் புண்யதீர்த்தங்களிற் படித்து குடைந்தாடவேணுடமென்னும் விருப்பமில்லாதாரில்லை; அங்ஙன் விருப்புற்றாரெல்லாரும் ஆயிரக்காதம் ஐங்நூறுகாதம் வழிநடந்துபோய் ஒருகுளத்திலும் குட்டையிலும் முழுக்கிட்டு வருவர்கள்; ஒரு தடவை புண்யதீர்த்தத்திற் பாய்ந்தாடுவதற்கு எல்லாரும் படாப்பாடுகள் படாநிற்க; பாஞ்சசன்னியமே! நீ அப்படிப்பட்ட வருத்தமொன்றும் படாமல் எம்பெருமானுடைய திருக்கைத்தலத்திலேயே எளிதாகக் குடியிருந்துகொண்டு அவனுடைய வாயமுதமாகிற லோகோத்தரமான புண்யதீர்த்தத்திலே ஸர்வகாலமும் அவகாஹித்திருக்கின்றாயே!, உனது அத்ருஷ்டமே அத்ருஷ்டம் - என்று கொண்டாடுகின்றாள். “வலம்புரியே! (நீ மற்றவர்களைப்போல்) போய் தீர்த்தமாடாதே - செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தம் பாய்ந்தாடவல்லாய்“ என்று அந்வயக்ரமம். சேய்த்தீர்த்தமாய் நின்ற என்ற அட்மொழி செங்கண்மாலுக்கு மாகலாம், செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தத்துக்குமாகலாம். சேய்த்தீர்த்தம் என்றது - நெடுந்தூரத்திலுள்ள தீர்த்தமென்றபடியாய், அதனால் அருமை காட்டப்பட்டதாய், அதனால் மிக்கசிறப்பு காட்டப்பட்டதாமென்க.
English Translation
O Great Conch! Forever in the company of the Lord, you do not go miles to take the holy dip. You are bathed in the spout of the Lord’s lips, --the Lord of the lotus eyes who uprooted the Marudu trees.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்