விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சந்திர மண்டலம் போல்*  தாமோதரன் கையில்* 
  அந்தரம் ஒன்று இன்றி*  ஏறி அவன் செவியில்* 
  மந்திரம் கொள்வாயே போலும்*  வலம்புரியே* 
  இந்திரனும் உன்னோடு*  செல்வத்துக்கு ஏலானே*.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வலம்புரியே! - வலம்புரிச்சங்கே!
தமோதரன்கையில் - கண்ணபிரானது திருக்கையில்
சந்திரமண்டலம் போல் - சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி - இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில் - அவனுடைய காதில்

விளக்க உரை

உரை:1

கண்ணபிரானுடைய திருக்கையிலே சந்திரமண்டலம்போலே விளங்காநின்று கொண்டு ஒரு நொடிப்பொழுதும் அத்திருக்கையை விட்டுப்பிரியாமல் அங்கேயிருந்துகொண்டு அவனுடைய திருச்செவியோடே அணைந்தாற்போலிருப்பதனால் அவனது திருக்காதில் ஏதோ ரஹஸ்யம் ஓதுவான் போலேயிராநின்றாய், சிறந்த செல்வம்பெற்றவனாகப் புகழப்படுகின்ற இந்திரனுக்கும் உன்னளவு செல்வமில்லாமையாலே நீ ஒப்பற்ற ஐச்வர்யம் அடைந்தவனாயிராநின்றாய் என்கிறாள். “அவன் செவியில் மந்திரன் கொள்வாயேபோலும்“ என்றவிடத்து வியாக்கியான் ஸ்ரீஸூக்தி - “உம்மைப்பிரிந்து ஆற்றமாட்டாதார் பலருமுண்டு என்று திருச்செவியிலே சொல்லுகிறாய் போலிருக்கிறது அவன் செவியிலே ரஹஸ்யத் திருச்செவியிலே சொல்லுவான்போல விருக்கை. கொள்கை - கொடுக்கை“ - என்று.

உரை:2

சங்கை சந்திரமண்டலத்திற்கு ஒப்பாகப் பாடுகிறாள். கண்ணன் கையில் உள்ள சங்கு அவன் காதருகில் திகழ்வதால் ரகசியம் பேசுவதுபோல் இருக்கிறது என்கிறாள். இந்த பெருமை இந்திரனுக்குக் கூட கிடைக்காது என்று கூறுகிறாள். இந்தப் பாசுரத்தில் சங்கை சந்திரனுக்கும், காதருகில் விளங்குவது, ரகசியம் பேசுவது போல் உள்ளது என்கிற உவமையும் கூறி நம்மை வியக்க வைக்கிறாள்

English Translation

O Moon-like Valampuri Conch! Forever perched on Damodara’s shoulder, you seem to be whispering secrets into his ears. Even Indra would envy your fortune.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்