விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குங்குமம் அப்பிக்*  குளிர் சாந்தம் மட்டித்து* 
    மங்கல வீதி*  வலஞ் செய்து மா மண நீர்* 
    அங்கு அவனோடும் உடன் சென்று*  அங்கு ஆனைமேல்* 
    மஞ்சனம் ஆட்டக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அப்பி - உடம்பெல்லாம்பூசி
குளிர்சாந்தம் - குளிர்ந்தசந்தனத்தை
மட்டித்து - கனக்கத்தடவி
ஆனைமேல் - மத்தகஜத்தின்மேலே
அவனோடும் உடன் சென்று - அக்கண்ணபிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி - (விவாஹநிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே

விளக்க உரை

உரை:1

கண்ணபிரானும் தானுமாக அக்நிஸமீபத்திலே சிலநாழிகை இருக்கநேர்ந்தமையால் அப்போதுண்டான வெப்பம் பொறுக்கமுடியாததாக, அதற்குப் பரிஹாரமாகக் குளிர்ந்த குங்குமக்குழம்பையும் ந்தனச்சேற்றையும் திருமேனியெங்கும் அப்பி இந்தத் திருவீதிவலம்வந்து, பிறகு வஸந்தஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாகக் கனாக்கண்டேனென்கிறாள். பச்சைக் கல்யாணத்தன்றிரவு நடைபெறும் வஸந்தஸ்நாநம் இப்பாட்டிற் கூறப்பட்டதென்க.

உரை:2

குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.  மாதவனுடன் மணம் நடந்த மகிழ்ச்சியில் கோதைக்கு சொற்கள் முன்னும் பின்னுமாய் வருகின்றன. குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மணநீர் மஞ்சனமாட்டி அங்கவனோடும் உடன் சென்று அங்கானை மேல் மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் என்று சொல்லாமல் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்துச் சொல்கிறாள்.

English Translation

I had a dream O sister! They smeared me with red powder and sandal paste, and took us around the town on an elephant, then bathed us both with scented water.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்