விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரிசிலை வாள் முகத்து*  என்னைமார் தாம் வந்திட்டு* 
    எரிமுகம் பாரித்து*  என்னை முன்னே நிறுத்தி* 
    அரிமுகன் அச்சுதன்*  கைம்மேல் என் கை வைத்துப்* 
    பொரிமுகந்து அட்டக்* கனாக் கண்டேன் தோழீ நான்*             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வரி சிலை வான் முகம் - அழகிய வில்போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையுடையவர்களான
என் ஐமார் தாம் - எனது தமையன்மார்கள்
வந்திட்டு - வந்து
எரிமுகம் பாரித்து - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச்செய்து
முன்னே என்னை நிறுத்தி - அந்த அக்னியின்முன்னே என்னை நிறுத்தி

விளக்க உரை

வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்.

English Translation

I had a dream O sister! Bright-faced brothers with bow-like eyebrows stood me before the kindled fire. They placed my hands over the lion-like Achyuta’s, then heaped puffed-rice for feeding the fire.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்