- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
இம்மைக்கும்* ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்*
நம்மை உடையவன்* நாராயணன் நம்பி*
செம்மை உடைய* திருக்கையால் தாள் பற்றி*
அம்மி மிதிக்கக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
காணொளி
பதவுரை
இம்மைக்கு - இப்பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும் - மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான் - சரண்யனாயிருப்பவனாய்
நம்மை உடையவன் - நமக்குசேஷியாய்
நம்பி - ஸகல கல்யாணகுண பரிபூர்ணனாய்
விளக்க உரை
இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்
English Translation
I had a dream O sister! Our Lord and master Narayana with lotus hands,--our sole refuge in this and seven lives to come, --lifted my foot and stood me on the grindstone.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்