விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மத்தளம் கொட்ட*  வரி சங்கம் நின்று ஊத* 
  முத்து உடைத் தாமம்*  நிரை தாழ்ந்த பந்தற் கீழ்* 
  மைத்துனன் நம்பி*  மதுசூதன் வந்து* 
  என்னைக் கைத்தலம் பற்றக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மத்தளம் கொட்ட - மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கள் நின்று ஊத - ரேகைகளையுட்டைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூரன் - மைத்துனமைமுறையையுடையனாய் பூர்ணனான கண்ணபிரான்
முத்து உடைதாமம் நிரைதாழ்ந்த பந்தல் கிழ் வந்து - முத்துக்களையுடைய மாலைத்திரள்கள் தொங்கவிடப்பெற்று பந்தலின்கீழேவந்து
என்னை கைத்தலம் பற்ற - என்னைப் பாணிக்ரஹணம் செய்தருள

விளக்க உரை

உரை:1

மருதங்கம் முதலிய பலவகைவாத்தியங்கள் அடிக்கவும் சங்குகளூதவும் இப்படிமங்களவாத்யகோஷம் முழங்காநிற்க, கண்ணபிரான் முத்துப்பந்தலின்கீழே எழுந்தருளிப் பரணிக்ரஹணம் பண்ணியருளக் கனாக்கண்டேனென்கிறாள். “நின்றூத“ என்றவிடத்து நின்று என்றது வார்த்தைப்பாடு. தைதுனன் - அத்தைமைந்தன். மாமன் மகளை மணக்கும்முறையைபற்றி நப்பின்னைப் பிராட்டிக்குக் கண்ணபிரான் தைதுன்னாதலால் ஆண்டாளும் அந்தஸம்பந்தத்தை ஆசைப்பட்டு “மைத்துனன் நம்பி“ என்கிறாளென்ப மதுசூதன் - மது என்ற அசுரனைக் கொன்றவன், விரோதிநிரஸநத்தில் வல்லவன் என்றபடி. இங்கே வயாக்யாநஸ்ரீஸூக்தி - (மதுசூதன்) மற்றுமு மைத்துனமைமுறையுண்டென்று ஆரேனும் வந்து கைப்பிடிக்கப்பார்க்கில் அவர்களையழியச்செய்து தானே ஸ்வீகரிக்கவல்லவனாய்த்து, தன்னுடைமையைப் பிறர் ‘என்னது‘ என்னும்போது அவர்களையழியச்செய்து கைக்கொள்ளவல்லனாய்த்து.

உரை:2

மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.

English Translation

I had a dream O sister! Drums beat and conches blew under a canopy of pearls on strings. Our Lord and cousin Madhusudana held my hand in his.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்