விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாரண மாயிரம்*  சூழ வலம் செய்து* 
    நாரண நம்பி*  நடக்கின்றான் என்றூ எதிர்* 
    பூரண பொற்குடம்*  வைத்துப் புறமெங்கும்* 
    தோரணம் நாட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோழீ - என் உயிர்த்தோழியே!
நம்பி - ஸகலகுணபரிபூர்ணனான
நாரணன் - ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ - ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று - பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிறனென்று (வாத்யகோஷதிகளால் நிச்சயித்து)

விளக்க உரை

உரை:1

ஸ்ரீமந்நாராயணன் என்னை மணம்புணருவதாக நிச்சயித்து ஆயிரக்கணக்கான யானைகளைப்புறப்பட விட்டுக்கொண்டு மிக்கஸம்ப்ரமங்களுடன் திருவீதிப் பிரதக்ஷிணமாக எழுந்தருளுகிற செய்தியை அறிந்த நகரத்திலுள்ளார் யாவரும் “பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்கவேணும்“ என்ற சாஸ்த்ரவிதிப்படியும் சிஷ்டாசார முறைப்படியும் தங்கள் தங்கள் திருமாளிகைக்கெதிரில் பூர்ணகும் பங்களை வைத்தும் தோரணங்கள் நாட்டியும் இப்படிப்பலவகையாக மங்களாலங்காரங்கள் செய்வதாகக் கனாக்கண்டேன் தோழீ! என்று தோழியுடுன் வருத்தகீர்த்தநம் பண்ணித் தரிக்கிறாள். வாரணம் - தற்சமவடசொல். ‘அயிரம்யானை‘ என்று அருளிச்செய்தமைக்குக் கருத்து - “தன்னோராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்“ (பெரியாழ்வார் திருமொழி 3-1-1.) என்று கண்ணபிரானுக்கு ஆயிரம் பேர்த் தோழன்மார்கள் உண்டானையாலும் அவர்களெல்லாரும் விட்டுப்பிரியாமல் கூடவேவருவார்களாகையாலும், கண்ணபிரான் வேறுபடுத்தமாட்டானாகையாலும், * தம்மையேநாளும் அத்தோழன்மார்களையும் யானைமீதேற்றி உகப்பனாகையாலும் “வாரணமாயிரஞ சூழ“ எனப்பட்டதென்க.

உரை:2

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.

 

English Translation

I had a dream O sister! The town was decked with festoons and golden urns. Surrounded by a thousand caparisoned elephants our Lord Narayana came working towards me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்