விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர்*  பாசத்து  அகப் பட்டிருந்தேன்* 
    பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ்குயிலே!*  குறிக்கொண்டு இது நீ கேள், 
    சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்*  பொன்வளை கொண்டு தருதல்* 
    இங்குள்ள காவினில் வாழக் கருதில்*  இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குயிலே! - கோகிலமே!,
இது - நான் சொல்லுகிற இதனை
நீ குறிக்கொண்டு கேள் - நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள்’
பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து - பசுங்கிளி போன்ற நிறத்தையுடையனான ச்ரிய பதியென்கிற ஒருவலையிலே
அகப்பட்டு இருந்தேன் - சிக்கிக்கொண்டு கிடக்கிறேன்;
 

விளக்க உரை

ஓ குயிலே! என்னுடைய கூக்குரல் உன்காதில் விழமுடியாதபடி, வண்டுகளின் இசைகள் நிறைந்தசோலையிலே அவ்விசைகளைக் கேட்டுக்கொண்டு அதுவே போதுபோக்காக நீ திரிந்தாயாகிலும் உன்னை நான்விடுவேனல்லேன்’ எனது கூக்குரலையும் உனது காதில் வீழ்த்துகின்றேன் கேளாய்; ஏனோதானா என்று கேளாதே; வண்டுகளின் இசையில் நின்றும் காதை மீட்டுக்கொண்டு என்வாய்ச் சொல்லையே குறிப்பாகக்கேள்; என்ன சொல்லுகிறேனென்னில்; இப்போது எனக்கு உண்டாயிருக்கும் நோய் என்னால் பாரிஹரித்துக் கொள்ள முடியாதது; எம்பெருமானுடைய வடிவழகு முதலியவற்றில் தோற்றுப்போய்க் கால் நடையாடாமல் இருந்தவிடத்தே யிருக்கும்படியான அவஸ்தையில் கிடக்கிறேன்; அதாவது - “முன்னையமார் முதல்வன வண்டுவராபதிமன்னன், மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே - அகப்பட்டேன்” என்றும் “கற்கின்ற நூல் வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன்காண்” என்றும் சொல்லுமாபோலே மாதவனாகிற வலையிலே நான் அகப்பட்டுக்கொண்டேன் - என்றாள். இது கேட்ட குயிலானது “அம்ம! இந்த க்ஷேமஸமாசாரத்தைச் சொல்லவதற்காகவோ என்னையழைத்து? நீ வலைப்பட்டிருந்தால் நான் என்செய் வல்லேன்?; என்று சொல்லிவிட்டு மீண்டும் வண்டுகளின் இசையைக் கேட்பதாகப் பாரங்முகமாயிருக்க, பின்னடிகளில் கடுமையாகச் சொல்லுகிறாள்; குயிலே! நீ இச்சோலையிலிருந்து ஜீவிக்கவேணுமே; என்னை அலக்ஷியம் பண்ணிக்கிடந்தாயாகில் இதிலே உனக்கு வாழமுடியுமோ? நான் முடிந்துபோனால் இச்சோலையை உனக்கு நோக்கித்தருவார் ஆர்? பிறகு இருக்க இடமில்லாமல் வருந்துவாய்; சுகமாக இங்கேவாழ்ந்திருக்கவேணுமென்று விரும்புவாயாகில், உனக்கு இரண்டு காரியம் சொல்லுகிறேன், இரண்டில் ஏதாவது ஒன்றை நீ செய்து தீரவேணும்; அவை எவை என்னில்; வலங்கையாழி யிடங்கைச்சங்கமுடையானான எம்பெருமான் இங்கே வரும்படிகூவுதல் ஒன்று; என்கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஒன்று; இவையிரண்டினுள் ஒன்றை நீ செய்தேயாகவேணுமென்கிறாள்.

English Translation

I am caught and caged in a desire for Sridhara, my Lord of parrot-hue. O Dark Koel living in the groves amid humming bees marks what I say: call the Lord of conch and discus, or retrieve my golden bangles. If you wish to remain in this grove, one or the other you must do.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்