விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சார்ங்கம் வளைய வலிக்கும்*  தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்* 
    நாங்கள் எம்மில் இருந்தொட்டி அகச்சங்கம்*  நானும்  அவனும்  அறிதும்* 
    தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்*  சிறுகுயிலே*
    திருமாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்*  அவனை நான் செய்வன காணே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேம் கனி - இனிமையான பழங்களையுடைய
மா - பொழில்  மாந்தோப்பிலே
செம் தளிர் கோதும் - சிவந்த துளிர்களைவாயலகால் கொந்துகிற
சிறு குயிலே! - இளங்குயிலே!
சார்ங்கம் - தனது வில்லை

விளக்க உரை

முதலடியிலுள்ள இரண்டு விசேஷணங்களும் எம்பெருமானுடைய வீரத்தன்மையையும், அந்தரங்கர்பக்கல் அன்புடைமையையும் விளக்குவன. கண்டகாட்சியில்தானே எதிரிகள் வில்லைப் பொகட்டுவிட்டு முதுகுகாட்டி ஓடும்படி தனது ஸ்ரீசார்ங்கத்தை வளைக்கவல்ல வீரத்தனம் மிக்கவன் என்கிறது முதல்விசேஷனம். அந்தப்புரத்தில் ச்ருங்காரஸங்கொண்டாடுகைக்குப் பாங்கான் ப்ரணயித்வமு முடையவன் என்கிறது.- பொருத்தமுடையன் என்று. இவ்விரண்டாலும் சொல்லிற்றாவது என்னென்னில்; அவ்வெம்பெருமான் என்னிடம் வரநினைத்தால் அதற்கு இடையூறாக எவ்வளவு விரோதங்கள் நேர்ந்தாலும் அவற்றைத் தொலைத்தருள்வதற்குத்தக்க வலிவுபடைத்தவன் என்பதும், ப்ரணயிநிகளுடன் கலக்குங் காலத்தில் ‘வாத்ஸ்யாயநத்தில் கைதேர்ந்தவன் என்னும் படியிருப்பன் என்பதும் கூறப்பட்டன. அவ்வெம்பெருமானுடைய சித்தவ்ருத்தியும் என்னுடைய சித்தவ்ருத்தியும் எங்களிருவர்க்கும் தெரியுமேயொழிய வேறொருவர்க்கும் தெரியாதென்கிறாள் இரண்டாமடியில். இருவருமாய்க் கலக்கும்போது “நான் உன்னையொழிய ஜீவிக்கமாட்டேன்’ நான் உன்னையொழிய ஜீவிக்கமாட்டேன்” என்றே இருவரும் சொல்லிக்கொள்வார்களாம். இதுவாய்த்து இருவரும் தம்மிலிருந்து ஒட்டியகச் சங்கம். இந்தசங்கேதமானது கேவலம் வாய்ச்சொல்லாகப் போய்விடாமல் காரியத்திலும் பர்யவஸிக்கும்படி செய்யவேண்டியது (குயிலே!) உன்கடமைகாண் என்கை உள்ளுறை.

English Translation

My Lord Tirumal is skilled in wielding the Sarnga bow, he is my ideal match; he and I share many secrets. O Little Koel sipping nectar from the tender red leaves of the Mango tree, you go and call him quickly, and then you can watch the things I do with him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்