விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானை*  புணர்வதோர் ஆசையினால்*
    என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து*  ஆவியை ஆகுலம் செய்யும், அங்குயிலே!*
    உனக் கென்ன மறைந்துறைவு* ஆழியும் சங்கும் ஒண் தண்டும்* 
    தங்கிய கையவனை வரக்கூவில்*  நீ சாலத் தருமம் பெறுதி*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கிய பால் கடல் - அலையெறிவையுடைய திருப்பாற்கடலில்
பள்ளி கொள்வானை - பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே
புணர்வது - ஓர் ஆசையினால் ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால்
என் - கொங்கை எனது முலைகள்
கிளர்ந்து  பருத்து - மிக்க உத்ஸாஹங் கொண்டு

விளக்க உரை

பரமபதத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெருமானைப் புணரவேணுமென்ற அபிநிவேசத்தினால் என் கொங்கை களானவை காலவிளம்பம் பொறுத்திருக்கமாட்டாத தன்மையினால் விம்மிவளர்ந்து, அவ்வளவிலும் அவன் ஓடிவந்து அணைக்காணாமையினாலே ‘யாம் உன்மார்விலேவந்து முளைத்தபடியாலன்றோ எமக்கு இந்தக்கஷ்டம் விளைந்தது’ உன்னுடைய தெளர்ப்பாக்யமானது எங்கள் மேலும் ஏறிப்பாய்ந்து எம்பெருமான் எங்களையும் உபேஷிக்கும்படியாயிற்று’ என்று சொல்லிக் கொண்டு அவை என்னைப்புடைக்கிற புடையை என்சொல்வேன்? என்று ஆண்டாள் கூக்குரலிட்டுக் கூறியதைக் கேட்ட அச்சோலைக்குயிலானது ‘இப்போது நாம் இவளுக்கு முகங்கொடுத்தால் நம்மை இவள் வெறுமனே விடமாட்டாள்;. “என்செய்யதாமரைக்கட் பெருமானார்க்கென்தூரிதாய், என் செய்யுமுரைத்தக்கால் இனக்குயில்காள்!” (திருவாய்மொழி க-ச-உ) என்றாள்போல இவளும் நம்மைத் தூரிதுபோகவேண்டிக் காலையொடிக்கக் கருதுவள்’ இந்த வெய்யிலிலும் கானலிலும் ஓடுவதற்கு நம்மாலாகாது’ அதுதன்னிலும் திருப்பாற்கடலெம்பெருமான் மீது இவளுக்கு ஆசையாம்’ அங்கே ஓட ஆராலாகும்? ஆகையாலே இவளுக்கு நாம் முகங்காட்டாமல் தலைமறைந்திருப்பதே தகுதி’ என்று நினைத்து முகத்தையுங்காட்டாமல் குரலையும் தெரிவியாமல் பதுங்கிக் கிடந்தது’ அங்ஙனமிருந்த அக்குயிலின் கருத்தைத் தெரிந்து கொண்ட ஆண்டாள் “அம் குயிலே!” என்று விளித்தான்’ (அழகிய குயிலே! என்றபடி) நீ மற்றகுயில்களைப் போலேயிருந்தாயாகில் உன்னைச்ரமப்படுத்த நினைத்தாலும் நினைப்பேன்’ அழகியகுயிலன்றோநீ’ உன் அழகைக் கண்டிருக்கிறநான் அவ்வழகுக்கு ஒருவாட்டம் பிறக்கும்படி உன்னைச்ரமப்படுத்த நினைப்பேனா? நீ எங்கும் தூரிது செல்லவேண்டா’ நீ இருந்த விடத்திலிருந்து கொண்டே, அப்பெருமான் இங்கேவரும்படி கூவினாயாகில் இதுவே மஹோபகாரமாம்’ எனக்குமாத்திரம் நன்மையன்று’ நீயும் ஒருவாய்ச்சொல்லாலே பெரிய தருமம் நடத்தினாயாவாய்; ‘நாம் கூவினால் அவ்வெம்பெருமான் ஓடிவரக் காத்திருக்கிறானோ; என்று நினையாதே; “நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான்” என்றும் “(பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்பமஸஹந்நிவ, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: ஸ்ரீ ஸ்ரீரங்கராஜஸ்தவனம்.)” என்றும் சொல்லியிருக்கிறபடி என்னைப் போன்ற ஆர்த்தர்கட்க விரைவாகவந்து காரியஞ் செய்வதற்காக அவன் திவ்யாயுதங்களை க்ஷணகாலமும் கைவிடாமல் ஏந்திக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா? ஏற்கனவே இங்கு வந்து காரியஞ்செய்வதில் ஆதரமுடையவனான அப்பெருமான் உன் கூவுதல் கேட்டபின்பும் வாராதே நிற்பனோ? அரைகுலையத்தலை குலைய ஆனைக்கு வந்து உதவினாற் போலே எனக்கும் உதவ ஓடிவருவன்காண்; ஆகையாலே நீ கூவு என்கிறாள்.

English Translation

Desiring the embrace of the Lord who sleeps in the foaming Sea of Milk, my bosom rises and throbs in excitement, tormenting my soul. O Good Koel, why do you go into hiding? Go and call my Lord of discus, mace and conch, and earn my lasting gratitude.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்