- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மாதலியென்பவன் தேவேந்திரனுடைய தேர்ப்பாகன்’ எப்போதும் யுத்தக் களத்திலே இந்திரன் முதுகு காட்டியோடுவது தவிர ஒருநாளும் நிலைத்துநின்று போர் செய்தறியானாகையாலே அவனுடைய ஸாரதியான இந்த மாதலி ஒருநாளும் போர்க்களத்திலே தேர்முன்னே நின்று பாகுசெய்தறியான்’ அப்படிப்பட்டவன் இராமபிரானுடைய தேர்ப்பாகனாக அமைந்த போது தான் முன்னின்று கோல்கொள்ளும்படியான பாக்கியம் பெற்றான். அப்படி அவன் தேர்முன் நின்று கோல் கொள்ள, க்ருதிரிமயுத்தத்திலேயே கைதேர்ந்தவனான இராவணன் மேலே அம்புகளை மழைபொழிந்தாற் போலே பொழிந்து அவனுடைய தலைகளை யெல்லாம் அறுத்தறுத்துத் தள்ளின இராமபிரான் திடீரென்று எந்தத் திசையிலாவது வந்து தோன்றுவனா? என்று நான் சுற்றுங்காணாநின்றாலும் அவன் ஒருதிக்கிலும் வந்து தோன்றுகின்றானில்லையே! குயிலே நீயோ என்துயரை நோக்குகின்றாயில்லை’ மலர்ந்த புஷ்பங்கள் நிறைந்த சோலையானது நமக்கு வாய்ப்பாகக் கிடைத்து விட்டதென்று இந்தச் சோலையிலே இருந்துகொண்டு சிறந்த புஷ்ப வாஸனையை அநுபவித்துக் கொண்டும், ‘காமரம்’ என்னும் பண்ணைப் பாடித்திரிகிற வண்டுகளின் ஸங்கீத ஸாரஸ்யத்தை அநுபவித்துக் கொண்டும் பேடையைவிட்டு ஒரு க்ஷணகாலமும் பிரியாமல் நித்யஸம்ச்லேஷமாய் இதுவே ஆநந்தமாக என்னைப்பற்றிச் சிறிதும் கவலையின்றியே கிடக்கிறாயே! இதுவா தகுதி? அவ்வெம்பெருமான் இங்கே வரும்படி ஒருவிசை கூவினால் உன் வாய்முத்து உதிருமோ? என்செல்வமே! அப்படி ஒருகால் கூவிக்கான் என்று வேண்டுகிறாளாய்த்து.
English Translation
The Lord went to war in Matali’s chariot raining arrows, and severed Ravana’s head one by one; he does not appear, alas O Koel living with your beloved in groves of wafting fragrance, sipping nectar from the fresh blossoms, go and call my gem-hued Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்