விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வஞ்சனையால் வந்த*  பேய்ச்சி முலை உண்ட*
  அஞ்சன வண்ணனை*  ஆய்ச்சி தாலாட்டிய*
  செஞ்சொல் மறையவர் சேர்*  புதுவைப் பட்டன் சொல்*
  எஞ்சாமை வல்லவர்க்கு*  இல்லை இடர்தானே  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வஞ்சனையால் வந்த - வஞ்சகவேஷத்தொடே வந்த
பேய்ச்சி - பூதனையினுடைய
முலை உண்ட - முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை - மைபோன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரானை
ஆய்ச்சி - யசோதைப்பிராட்டி

விளக்க உரை

உரை:1

கண்ணபிரானைத் தொட்டிலிற் கண்வளர்த்தித் தாலாட்டாக யசோதைப்பிராட்டி அன்று சொன்ன பாசுரங்களை உட்கொண்டு நான் இத்திருமொழி பாடினேன்; இதை நின்றாகக் கற்பவர்கள் ஒருவகைத் துன்பமுமடையாமல் நித்யாநிந்தம் பெறுவரென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. தாலாட்டிய என்றது விசேஷணமன்று. இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுமுடன்தொக்க தொகை.

உரை:2

உன்னைக் கொல்லும் தீய எண்ணத்துடன் வந்த பூதகி என்னும் பேயின் முலைப்பால் உண்ட கருமை நிறக் கண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
சிறப்பான சொற்களை மறை ஓதுவோர் நிறைந்த சிறீவில்லிபுத்தூர் வாழ் பட்டன் (பெரியாழ்வார்)பாடியதை ஒன்று விடாமல் படிப்பவர்க்கு இடர் என்றும் இல்லை.

English Translation

This decad by Pattarbiran of Puduvai fame, where pure-tongued Vedic seers live, recalls the Talattu of Yasoda Sung for the dark-hued Lord who drank the deceitful ogress Putana’s breast. Those who recite it without a fault will have no sorrow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்