- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
‘கண்ணபிரான் இன்னது செய்தான்’ என்று பிறர்க்குச் சொல்லமுடியாதபடி அவன் சில குறும்புகளைச் செய்ய, அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அவ்வளவேயோ வேண்டுவது? எங்கள் பருவத்தைச் சிறிது ஆராயவேண்டாவோ? (“முல்லையேப முழுமுற்றும் போந்தில” என்றபடி) கொங்கை இன்னுங் குவிந்தெழுந்திலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் கருத்து அறியும்படி குருகுலவாஸம் பண்ணி ஒன்றுங்கற்றிலோம்’ நீயோ ஒரு பெண்பெண்டாட்டிக்காக வானரப்படை திரட்டிக் கடலில் அணைகட்டி அரக்கர் குலங்களை வேரற வொழித்த மஹாவீரனாயிராநின்றாய்’ அபலைகளான நாங்கள் உன்னுடைய பலத்திற்கு ஈடுகொடுக்கவல்லோமல்லோம்’ ஆகையால், பிரானே! எம்மை நீ நலியாதே கடக்கப்போகவேணு மென்கிறார்கள்.
உரை:2
English Translation
Your words will be sweet when spoken to dainty damsels. Do not waste them on us innocent ones. O Lord of ocean hue, Lord who bridged the ocean strait! Upon your wives we swear, do not break our sand castles.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்