விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளை நுண்மணல் கொண்டு*  சிற்றில் விசித்திரப்பட*  வீதிவாய்த்- 
    தெள்ளிநாங்கள் இழைத்த கோலமழித்தியாகிலும், உன் த‌ன் மேல்* 
    உள்ள்ம் ஓடி உருகலல்லால்*  உரோடம் ஓன்று மிலோம் கண்டாய்* 
    கள்ளமாதவா! கேசவா!* உன் முகத்தன கண்கள் அல்லவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள்ளம் - கபடச்செய்கைகளையுடைய
மாதவா - கண்ணபிரானே!
விசித்திரப்பட - (அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த - தெளிந்து கட்டின
உரோடம் ஒன்றும் இலோம - துளியும் கோபமுடையோமல்லோம்’

 

விளக்க உரை

மன்மதன் துஷ்டசீல தேவதை யாகையாலே அவனுக்கு இறையும் நெஞ்சு கோணவொண்ணாதென்று அவன் வரும் வீதியைப் பாங்காக அலங்கரித்தற் பொருட்டு நிலாப்போல் வெளுத்த மணல்களைக் கொணர்ந்து, அவற்றை பருக்கைக் கற்களின் கலப்பில்லாமல் புடைத்து நாங்களிழைத்த இக்கோலத்தை நீ அழித்தபோதிலும், ஸர்வஸ்மாத்பரனானவன் இப்படியெல்லாம் செய்யப் பெறுவதே! ஈதென்ன ஸௌசீல்யம்!’ என்று நெஞ்சு உருகி நீராய்ப் போமித்தனையொழிய, ரோஷமென்று பேர்படும்படி ஒரு விகாரம் பெற்றோ மாகோம்’ ஆகிலும், உன்முகத்திலுள்ளவை மெய்யே கண்களாகில் நீ இச்சிற்றிலைச் சிதைக்க ஒருப்படமாட்டாய்’ இச்சிற்றிலை அன்புடன் நோக்குகையன்றோ கண்படைத்ததற்குப் பிரயோஜனம் என்கிறார்கள். “வீதிவாய்” ஸ்ரீ வாய்-ஏழனுருபு. அழித்தி-முன்னிலை யொருமை வினைமுற்று. “உருகில்லால்” என்றும் ஓதுவர். உரோடம்-ரொஷம். (ரு)

English Translation

We are not yet mature, our breasts have not ripened. We have not learnt to play your games using sand castles. O Lord who routed the army of Rakshasas in Lanka, Lord who burnt the city to dust, pray spares us!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்