விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாசு உடை உடம்பொடு தலை உலறி*  வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு* 
  தேசு உடைத் திறல் உடைக் காமதேவா!*  நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்* 
  பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்*  பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்* 
  கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும்*  இப்பேறு எனக்கு அருளு கண்டாய்*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேச உடை - (பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரையுடையவனும்
திறல் உடை - மிடுக்கையுடையவனும்
எம்பெருமான் - எமக்கு ஸ்வாமியுமான
காமதேவா - மன்மதனே!
மாசு உடை - அழுக்குப் படிந்த

விளக்க உரை

உரை:1

மாசுடை உடம்போடு - உடம்பில் அழுக்கேறும்படி முழுகாமலிருந்து என்றபடி. கண்ணபிரானோடு கலக்கப்பெறாத சோகத்தினால் உடம்பழுக்குப் போகக் குளிக்கமாட்டிற்றிலள் என்க. தலைஉலறிஸ்ரீகுழலில் பூக்களை அணிந்து கொள்ளாமலிருக்கையைக் கூறியவாறு. வாய்ப்புறம் வெளுத்து - வெற்றிலை தின்கைக்கு ப்ரஸக்தியுமில்லாமையால் அதரம் வெளுக்கவேணுமத்தனையிறே. ‘ஒருபோதும் என்றவிடத்து உம்மை - இசைநிறையென்னலாம். ‘என்றைக்காவது ஒருநாள் கண்ணபிரான் வந்து கூடுவன் கொல்’! என்னும் நசையினால் ஒருவேளை உண்டு உயிரைக் காக்கின்றாள் போலும். குறிக்கோள் ஸ்ரீ ‘ஆண்டாள் இவ்வளவு வருத்தப்பட்டு ஒரு நோன்பை நோற்றாளே!’ என்று உன் நெஞ்சில் எப்போதும் பட்டிருக்கவேண்டுமென்றபடி. கண்ணபிரானுக்குத் திருவடி வருடும்படியான பாக்கியம் எனக்கு வாய்த்தாலன்றி என் ஸத்தை ஜீவியாதென்கை பின்னடிகளின் கருத்து. அவனை முலையாலணைக்க வேண்டுகின்றவிவள் கால்பிடிக்கப் பெறவேண்டுவானென்? எனில்’ காலைப் பிடித்துக்கொண்டால் ஆகாதகாரிய மொன்று மில்லையே யென்றுநினைவு போலும். கேசவன் - பிரம ருத்திரர்கட்குத் தலைவன்’ கேசியைக் கொன்றவனென்றுமாம்.

உரை:2

அழுக்கேறிய உடம்புடனும் எண்ணெய் கூடத் தேய்க்காத சரியாக வாராத தலையுடனும் ஒருவேளை  உணவு உண்டு மெலிந்த காரணத்தால்  , சிவந்த இதழ்கள் வெளுத்து ஒளி பொருந்திய, காதலர் தேகம் இணைக்கின்ற திறம்பெற்ற காமதேவா உன்னை நோற்கின்றேன்.என் நோன்பின் நோக்கம் கண்டு கொள் பேசுவது ஒன்று உண்டு இங்கு என் தலைவன் 
என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும்  வண்ணம்கேசவன் நம்பியின் மணவாட்டி ஆகி அவனுக்குச் சேவை செய்வாள் என்னும் பெரும் பேற்றை எனக்கு அருளுவாயாக !

English Translation

I shall keep my body fifty, leave my hair unkempt and my lips discolored, and eat but once a day. Take note of my austerities. O bright and able God of Love! If you wish to SAVE my feminine charm, this you must do: grant me the pleasure of pressing my Lord Krishna Kesava’s feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்