விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு*  முப்போதும் உன் அடி வணங்கித்* 
    தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து*  வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே* 
    கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு*  கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி* 
    வித்தகன் வேங்கட வாணன் என்னும்*  விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன் அடி வணங்கி - உன் அடியை வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்துவாசகத்து அழித்து உன்னை வைதிடாமே -
‘இவன் பொய்யான்தெய்வம், என்று சொல்லிமனங் கொதித்து அழித்து வாய்கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி
கொத்து அலர்ப்பூ கணைதொடுத்துக் கொண்டு - கொத்துக்கொத்தாக விகஸியாநின்ற புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக்கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் போ; எழுதி - கோவிந்தநாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு
வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக - அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே

விளக்க உரை

உரை:1

மன்மதன் ரஜோகுண ப்ரசுரனாதலால் மதகரமான் மலர்கள் அவனுக்கு இடத்தக்கவையென்று கொண்டு ஊமத்தை மலர்களையும் முருக்க மலர்களையுமிடுகிறபடி. முப்போது - இரண்டு சந்தியும் ஒரு உச்சிப்போதும். இரண்டாமடியின் கருத்து: - நான் உன் அடிபணிவதற்குப் பலனாக என் மநோரதத்தை நீ நிறைவேற்றுதொழியில், எனது நெஞ்சானது மிகவுங் கொதிப்படைந்து, ‘மன்மதன் மெய்யே பலன்தருந் தெய்வமல்லன்’ இவன் பொய்த்தெய்வம்’ என்று நாடெங்குமறியும்படி நான் உன் மஹிமையை அழித்து நிந்திக்க நோpடும்’ அப்படிப்பட்ட பாரிபவத்தை நீ அடையாது தப்பாமல் பேறு பெறுவிக்கப் பாராய் என்கை. தத்துவம் - உண்மை; இலி - இல்லாதவன். வாசகத்து என்றது - நெஞ்சில் நினைக்குமளவே யன்றியே வெளிப்படையாகக் கூறுதலைக் கூறியவாறு. (கோவிந்தனென்பதோர் பேரேழுதி) கீழ்ப்பாட்டில் “கடல்வண்ண னென்பதோர் பேரேழுதி” என்றவிடத்து உரைத்தவையெல்லாம் இங்குக் கொள்ளத்தக்கன. வித்தகன் - ஆச்சாரியப்படத் தகுந்த குணசேஷ்டிதங்களை யுடையவன் என்றபடி. வாணன் என்பது. ‘வாழ்நன்’ என்பதன் மரூஉ. திருவேங்கமுடையானை விளக்கென்றது - அவன் தன்னுடைய குணங்களெல்லாம் திருமலையில் மேயவிளக்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.

உரை:2

நறுமணம் கொண்ட ஊமத்த மலர் முருங்கை மலர் கொண்டு (கல்யாண முருங்கைப் பூ ) மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது உண்மை இல்லாதவன் என்றுமனம் வெந்துநீ சொன்ன சொல் காப்பாற்றுபவன் என்ற எண்ணத்தை நெஞ்சத்தில் இருந்து அகற்றிஉன்னை திட்டிவிடுவதற்குள் மலர்க்கொத்து கொண்டுஅம்புகள் தொடுத்து கோவிந்தன் என அதிலே பெயரெழுதி பல வித்தைகள் கற்றவன் வேங்கடவன் என்னும் பெயர் பெற்ற விளக்கினில் (என் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் விளக்கானவனிடம் புக என்னை எய்து விடேன்.

English Translation

Thrice a day, I worship you with Datura and Milkweed flowers. O God of love! Do not earn the abuse of a disgruntled heart and spoil your reputation. Brace your bow with clustered flowers and think of the name Govinda. Then aim your mark and send me straight to the Lord of Venkatam hills.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்