- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
சிறிய வெண்மணல்களைக் கொண்டு வீதிகளை அலங்கரித்தலும், நாட்காலே நீராடுதலும், ஸமித்துக்களை நெருப்பிலிட்டுத் தீவளர்த்தலும் இங்குக் காமநோன்புக்கு உறுப்பாகச் செய்யுமவை யென்க. சுள்ளி ஸ்ரீ இளவிறகு. முயன்று ஸ்ரீ எம்பெருமான்றானே வந்து நம்மை ஸ்வீகரிக்க நிற்றல் ஸ்வரூபாநு ரூபம் என்று அறுதியிட்டு நிற்கக் கடவளான நான், இப்போது அவனைப் பெறுகைக்குச் செய்யும் முயற்சி இது காணாய் என்கை. இம்முயற்சிக்கு ப்ரயோஜநங் கூறுவன, பின்னடிகள். கள்ளவிழ்பூங்கணை- அரவிந்தம், அசோகம், மா, நவமல்லிகை, கருநெய்தல் ஆகிய இவ்வைந்து மலர்களும் மன்மதனுக்கு அம்புகளாம். (கடல்வண்ணன் இத்யாதி.) ‘எழுதி’ என்றது - அம்பிலே எழுதி என்றனவாறுமாம்’ நெஞ்சிலே எழுதிக் கொண்டு என்றவாறுமாம்’ நெஞ்சிலே எழுதிக்கொண்டு என்றவாறுமாம்’ ‘அம்பிலே எழுதிக் கொண்டு’ என்ற பக்ஷத்தில் ‘ச்ரமஹரமான வடிவையுடைய உன்னை ஆண்டாள் ஆசைப்பட்டாள்’ என்று அம்பிலே எழுதி எய்து அவ்வழியாலே அவனுக்கு என்மீது ஆசையை உண்டாக்கிப் பின்னே அவனோடு என்னைச் சேர்க்கவேணுமென வேண்டுவதாகக் கருத்து உணரத்தக்கது’ இனி ‘நெஞ்சிலே எழுதிக்கொண்டு’ என்ற பக்ஷத்தில், இன்னானோடு இவளைச் சேர்ப்பிக்கவேணுமென்று ஸங்கல்பித்துக் கொண்டு என்றபடி.
உரை:2
English Translation
I decorate the streets with fine sand, and bathe before dawn, then feed the fire with thorn less faggots and invoke you. O God of love! Brace your bow with nectared flowers, and think of the name “Ocean hued Lord”, then aim your mark to unite me with the Lord who ripped the bird’s beak.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்