விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்*  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி* 
  அங்குப் பறைகொண்ட ஆற்றை*  அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* 
  சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*  இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்* 
  செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (2)       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வங்கம் கடல் - கப்பல்களையுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த - (தேவர்களுக்காகக்) கடைந்த ச்ரிய:பதியான
கேசவனை - கண்ணபிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார் - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று - அடைந்து

விளக்க உரை

உரை:1

முதற்பாட்டில், காலத்தையும், அதிகாரிகளையும், காரியத்தைத் தலைக்கட்டுவிக்கும் கிருஷ்ணனையுங் கொண்டாடிக்கொண்டு நோன்பில் முயன்று, இரண்டாம் பாட்டில், நோன்புக்கு அங்கமாகச் செய்யவேண்டியவற்றையும் தவிர வேண்டியவற்றையும் விவேகித்து, மூன்றாம் பாட்டில், நாம் நமக்கு இனிதாக நோன்பு நோற்க அனுமதி பண்ணின நாட்டார்க்கு ஆநுஷங்கிகமாக வர்ஷரூபமான பலன் ஸித்திக்குமென்று சொல்லி, நான்காம் பாட்டில், வர்ஷ தேவதையான பர்ஜந்யனை அழைத்து நாடெங்கும் மழை பெய்ய நியமித்து, ஐந்தாம்பாட்டில், தாங்கள் தொடங்குகிற நோன்புக்கு பாதி பந்தகமான பாவங்கள் எம்பெருமானை நாம் வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திக்கில் தன்னடையே கழியும் என்றறுதியிட்டு, தாங்கள் உத்தேசித்த காரியத்தில் பாகவத ஸமுதாய மனைத்தையும் அந்வயிப்பிக்க விரும்பி ஆறாவது பாட்டுத் தொடங்கிப் பதினைந்தாம் பாட்டளவுமுள்ள பத்துப் பாசுரங்களாலே தங்களோடொத்த பருவத்தினரான பெண்களனைவரையு முணர்த்தி, பின்பு எல்லாருமாகத் திரண்டு நந்தகோபர் திருமாளிகையேறப் புகுந்து, பதினாறாம் பாட்டில், திருவாசல் காக்கும் முதலியை எழுப்பி, பதினேழாம் பாட்டில், ஸ்ரீ நந்தகோபர், யசோதைப் பிராட்டி கண்ணபிரான், நம்பி மூத்தபிரான் இவர்களைச் சொல்லும் முறைகள் வழுவாமற் சொல்லி எழுப்பி, பதினெட்டாம் பாட்டில், நப்பின்னைப் பிராட்டியைப் பலவாறாகப் புகழ்ந்து எழுப்பி, பத்தொன்பதாம் பாட்டிலும், இருபதாம் பாட்டிலும், கண்ணபிரானையும் நப்பின்னைப் பிராட்டியையுஞ் சேரவுணர்த்தி, இருபத்தோராம் பாட்டிலும் இருபத்திரண்டாம் பாட்டிலும், தாங்கள் குணங்களுக்குத் தோற்று வந்தபடியையும். அபிமாநங் குலைந்து வந்தபடியையும் கடாக்ஷமே தாரகமாக வந்தபடியையும் கண்ணபிரான் ஸந்நிதியில் விண்ணப்பஞ்செய்து, இருபத்து மூன்றாம் பாட்டில், எங்களுக்காகப் புறப்பட்டுச் சீரியசிங்காசனத்தில் ஆஸ்தாநங் கொண்டருள வேணுமென்று பிரார்த்தித்து, இருபத்தினான்காம் பாட்டில், அவ்வாஸ்தாநத்திற்கு மங்களாசாஸநம் பண்ணி, இருபத்தைந்தாம் பாட்டில், தாங்கள் அர்த்திகளாய் வந்தமையை விண்ணப்பஞ்செய்து, இருபத்தாறாம் பாட்டில், நோன்புக்கு உரிய உபகரணங்கள் இன்னவை இன்னவை யென்று சொல்லி அபேக்ஷித்து, இருபத்தேழாம் பாட்டில், நோன்பு நோற்றுத் தலைக்கட்டியபின் பெறவேண்டும் ஸம்மானங்களை அபேக்ஷித்து, இருபத்தெட்டாம் பாட்டில், தங்கள் நினைவிலுள்ளவையும் பலிக்கும்படி தங்கள் சிறுமையையும் அவன் பெருமையையும் அவனோடுள்ள உறவையுஞ் சொல்லிக்கொண்டு பிழைகளைப் பொறுத்தருளவேண்டி, இருபத்தொன்பதாம் பாட்டில், தங்களுடைய உத்தேசயத்தை வெளிப்படையாகக் கூறி, இக்கருத்தை நீ நிறைவேற்றாதொழிய வொண்ணாதென்று நிர்ப்பந்தித்துப் பிரார்த்திக்க, அவனும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று தலைதுலுக்கப் பெற்று மநோரதம் தலைக்கட்டப் பெற்றபடியைப் பிற்காலத்திலே அக்கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இப்பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானுடைய திருவருட்கு இலக்காகி மகிழப்பெறுவர் என்று நிகமிக்கின்றவாறாகச் செல்லும் பாசுரம், இது.

உரை:2

" திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் தந்தருளிய கண்ணபிரானை, கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனை, பூர்ண சந்திரன் போன்ற முகத்தையுடைவனை, ஆபரணங்களை அணிந்த ஆயர்பாடி மகளிரை பறை என்ற பெயரில் அடிமையாக்கிக் கொண்ட கண்ணனின் வரலாற்றை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த புதிய தாமரை மலர்களாலான மாலையை உடுத்திய அந்தணருமான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளால் அருளிச் செய்த தமிழ் பாமாலை முப்பது பாடல்களையும் தவறாமல் ஆர்வத்துடன் உள்ளத்தூய்மையுடன் பாடுபவர்கள், மாலையணிந்த நான்கு திருத்தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும் எல்லா செல்வங்களையும் உடைய திருமகளை நாதனாய் பெற்ற ஸ்ரீமன் நாராயணின் திருவருள் பெற்று, எப்பொழுதும், எவ்வித குறையுமின்றி பேரின்பத்துடன் வாழ்வார்கள்."

English Translation

This is garland of thirty songs of faultless Sangam Tamil on how the moon-faced be jeweled maidens praised the Lord and got their boons , sung by Pattarbiran’s daughter Kodai, Goda, of lotus-wafting cool-watered Puduvai fame; by the grace of the mighty-four armed, beautiful eyed, gracious faced Tirumal, those who sing it with joy shall find eternal bliss everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்