விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*  அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து*  உன்தன்னைப்- 
  பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*  குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா*  உன்தன்னோடு- 
  உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*  அறியாத பிள்ளைகளோம் அன்பினால்*  உன்தன்னைச்- 
  சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே*  இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யாம் - நாங்கள்
கறவைகள் பின் சென்று - பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து - காடு சேர்ந்து
உண்போம் - சரீரபோஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத - சிறிதளவும் அறிவில்லாத

விளக்க உரை

உரை:1

மார்கழி நீராடுவான் என்று நோன்பை ப்ரஸ்தாவித்து, அந்நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும், நோன்பு தலைக்கட்டின பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும் ப்ரீதி பரீவாஹமாகக் கூடிக் குளிர்ந்து பற்சோறுண்கையையும் கீழிரண்டு பாட்டாலும் அபேஷித்த ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான், பெண்காள்! உங்களுடைய கருத்து இவ்வளவென்று எனக்குத் தோற்றவில்லை; நீங்கள் இப்போது அபேஷித்தவற்றையும் இன்னுஞ்சில அபேஷித்தால் அவற்றையும் நான் தரவேண்டில் உங்களுடைய நிலைமையை அறிந்து தரவேண்டியிரா நின்றது; பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது முயற்சியுடையீர்களா யிருக்கவேண்டும் அதுக்குடலாக நீங்கள் அநுஷ்டித்த உபாய மேதேனுமுண்டோ? என்று கேட்டருள அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘பிரானே! எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறிலையோ? அறிவிலிகளான நாங்கள் எடுத்துக் கூறவேண்டும் படி நீ உணராத தொன்றுண்டோ?’ எங்கள் நிலைமையை நன்கு உணரா நின்ற நீ “நீங்களனுட்டித்த உபாய மேதேனுமுண்டோ? ஏன வினவியது மிக அற்புதமாயிருந்ததீ!” என்று தங்கள் ஸ்வரூப மிருக்கும்படியை அறிவித்து, இவ்விடைப்பெண்கள் கேவலம் தயா விஷயமென்று திருவுள்ளம் பற்றி நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பஞ் செய்யும் பாசுரம், இது. கீழ், போற்றியாம் வந்தோம், செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? உன்னை அருத்தித்து வந்தோம் என்றிவை முதலான பாசுரங்களினால் ஆய்ச்சிகள் தங்களுக்குள்ள ப்ராப்யருசியை வெளியிட்டனர்; அந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும் அவனுடைய உபாயத்வத்தையும் வெளியிடுகின்றனர்,

உரை:2

  "பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவும் படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறைவும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக்கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்ப்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாதது. அற்ப அறிவைப் பெற்ற சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மதவன் போன்ற) சிறிய பெயர்களினால் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டும்."

English Translation

Let us follow the cows into the forest and eat together while they graze. We are privileged to have you born among us simple cowherd folk. O Faultless Govinda! Our bond with you is eternal. Artless children that we are, out of love we called you petty names; pray do not be angry with us. O Lord, grant us our boons.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்