விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று*  கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்* 
  செப்பம் உடையாய் திறல் உடையாய்*  செற்றார்க்கு- வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்* 
  செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்*  நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்* 
  உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை*  இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முப்பத்து மூவர் அமரர்க்கு - முப்பத்து முக்கோடி தேவர்கட்கு
முன் சென்று - (துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி
கப்பம் - (அவர்களுடைய) நடுக்கத்தை
தவிர்க்கும் - நீக்கியருளவல்ல
கலியே - மிடுக்கையுடைய கண்ணபிரானே!

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில், “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சிகள் தங்களாற்றாமையினால் வருத்தந் தோற்றச் சில குற்றங் கூறினலேயாயினும், பெருமானுடைய திருவுள்ளமறிந்து ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பஞ் செய்வோமென்றெண்ணி நப்பின்னை பேசாதே பள்ளிகொண்டிருந்தாள்’ அவளோட்டைக் கலவியிற் பரவசப்பட்டுள்ள கண்ணபிரானையும் “நப்பின்னைப் பிராட்டியை நோக்கி அதிக்ஷேபமாகக் கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகங்காட்டக் கடவோ மல்லோம்” என்று சீற்ற முற்றிருக்கக்கூடும் இவன் என்று அதிசங்கித்த ஆய்ச்சிகள், மீண்டும் அக்கண்ண பிரான்றன்னை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பாக்கப் பேசித் துயிலெழ வேண்டினவிடத்தும் அவன் வாய்திறவாதிருக்க, இவ்வாய்ச்சிகள், “நாம் ப்ரணய ரோஷத்தினால் நப்பின்னை விஷயமாகக் கூறிய சில வார்த்தைகள் இவனுக்கு அஸஹ்யமாயின போலும்’ இனி, அவளுடைய பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியப் பெறும்” என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹகுணங்களையுங் கூறி ஏத்தி, “நங்காய்! எங்கள் மநோரதத்தைத் தலைகாட்டி யருளவேணும்” என வேண்டுமாற்றாற் செல்லுகிறது, இப்பாட்டு. முப்பத்து மூவரமரர்- அஷ்டவஸுக்கள், ஏகாதசருத்ரர். த்வாதசாதித்யர், அச்விநிதேவதைகள் இருவர், ஆக அமரர் முப்பத்து மூவராய், முக்கியரான அவர் களைக் கூறியது மற்றுள்ளாரையுங் கூறியவாறாகக் கொள்க.

உரை:2

"முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும், அவர்களுக்கு துன்பம் நெருங்குவதற்கு முன்னரே அவர்களைக்காக்கும் கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச்செய்பவனே! பகைவரை அடக்கும் வலிமையுடையவனே! பகைவருக்கு துன்பங்களைக்கொடுப்பவனே! உறக்கம் நீங்கி எழுந்துவாராய்! செப்பைப்போன்ற மென்மையான மார்பகங்களையும், சிறு இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து, உங்கள் மணாவாளனான கண்ணனையும் எங்களுக்களித்து நாங்கள் நீராடச்செய்வாயாக!"

English Translation

Wake up, O warrior who leads the hosts of thirty-three celestials and allays their fears! Wake up, O strong One, Mighty One, Pure One, who strikes terror in the hearts of the evil. Wake up, O full breasted lady Nappinnai with slender waist and coral lips! Give us your fan and your mirror, and let us attend on your husband now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்