விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாணிக் குறளுருவாய்*  மாயனை என்மனத்துள்ளே* 
  பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்*  பிறிதுஇன்றி*
  மாணிக்கப் பண்டாரம்கண்டீர்*  வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!* 
  பாணிக்க வேண்டாநடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாணி - பிரமசாரிவேஷத்தையுடைய
குளள்உரு - வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம் - மாணிக்கநிதிபோல் இனியனும்
மாயனை - ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி - ஆசைப்பட்டு

விளக்க உரை

தேவேந்திரனுடைய வேண்டுகோளை நிறைவேற்றுதற் பொருட்டுக் குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி ஓங்கியுலகளக்கும்போது, அநபேக்ஷிகள் தலையிலும் திருவடியை வைத்தருளின பரமகாருணிக ஸ்வபாவனும், தனது நிர்ஹேதுககிருபையினாலன்றிப் பெறுதற்கரியனும், மாயச் செயல்களில் வல்லவனுமான எம்பெருமானை நான் இன்று எனது ஹ்ருதயத்தில் நிலை நிறுத்தினேனாதலால், பொல்லாத இந்திரியங்களே! இனி நீங்கள் இங்கு நசை வைத்திட வேண்டியதில்லை என்கிறார். இந்திரியங்கள் அசேதனங்களாயினும் கொடுமைபுரிவதிற் சேதநகரில் விஞ்சியிருத்தலால் “குறும்பர்களுள்ளீர்” என உயர்திணையாகக் கூறினரென்க. “உண்ணிலாவிய ஐவரால்” “கோவாய் ஐவர் என் மெய்குடியேறி” என்பன காண்க. இந்திரியங்களை வேறிடந்தேடி ஓடச்சொன்னது- கூறைசோறிவைதாவென்று குமைக்கையாகிற உங்கள் தொழில்களைச் செய்யாதொழியுங்கள் என்றவாறு, வலிவல் - மீமிசைச் சொல். (உள்ளீர்) எம்பெருமான் எனது நெஞ்சில் வந்து குடிகொண்டவுடனே நீங்கள் ஓடிப்போகவேண்டியது ப்ராப்தம்; அப்படியன்றி இன்னும் ஓடாதிருந்தீர்களாகில் என்பது சமத்காரப் பொருள்.

English Translation

O Ye great miserable sicknesses! Listen, Let me tell you something. Know that this, my body, is a temple where the cowherd-Lord resides. O Deep-rooted miseries, let me repeat; you have not place here, know it. So more on. No more like old, the fortress is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்