- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கையில் கனியென்னக்* கண்ணனைக் காட்டித் தரிலும்* உன் தன்-
மெய்யில் பிறங்கிய* சீரன்றி வேண்டிலன் யான்,* நிரயத்-
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள்நீ*
செய்யில் தரிப்பன்* இராமாநுச! என் செழுங் கொண்டலே!
காணொளி
பதவுரை
செழு கொண்டல் - ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற;
என் இராமாநுச - எம்பெருமானாரே;
கண்ணனை - எம்பெருமானை;
கையில் கனி என்ன - உள்ளங்கை நெல்லிக் கனிபோலே;
காட்டி தரினாம் - காட்டிக் கொடுத்தாலும்;
விளக்க உரை
நிரயத்தொய்யில் = நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸாரநிலமே நரகமெனப்படும். தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.
English Translation
O Ramanuja! My ripe rain-cloud! Even if you give me Krishna like a fruit in my hands, I still seek the glory that flows from your frame only, Whether I fall into the dungeon of hell or whether I attain the glorious high heaven, you must give me this, or else I shall not live.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்