விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு*  மதி மயங்கித்- 
  துயக்கும் பிறவியில்*  தோன்றிய என்னை*  துயரகற்றி- 
  உயக்கொண்டு நல்கும் இராமாநுச! என்றது உன்னையுன்னி* 
  நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,*  நல்லவர் என்றும்நைந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மயக்கும் - அஜ்ஞானத்தை விளைக்க வல்ல;
இரு வினை - புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற;
வல்லியல் - விலங்கில்;
பூண்டு - அகப்பட்டுக் கொண்டு;
மதி மயங்கி - அறிவுகெட்டு;

விளக்க உரை

எம்பெருமானார்க்கு பாவநத்வம் என்றும் போக்யத்வம் என்றும் இரண்டு படிகள் உண்டு. பாவநத்வமாவது-பக்தர்களுடைய பாவங்களைப்போக்கிப் பரிசுத்தப்படுத்தல். போக்யத்வமாவது எப்போதும் அநுபவிக்கக் கூடியவராயிருக்கை. இவ்விரண்டில் பாவநத்வத்தைவிட போக்யத்வமே சிறந்தது; ஏனென்றால், நம்முடைய பாவங்களைப் போக்கினாரென்கிற காரணத்தாலே நாம் அவரைப் பாவநர் என்று அநுஸந்திக்கவேண்டும்; இது ஒரு உபாதியைப்பற்றி வருவது; போக்யத்வத்தை அநுஸந்திப்பதோ இப்படிப்பட்டதல்ல. அது ஸ்வரூபப்ரயுக்தம். ஆகையாலே, பாவநத்வத்தை அநுஸந்திப்பதைவிட யோக்யதையை அநுஸந்திப்பதே சிறந்தது. அப்படியிருக்க இவ்வமுதனார் இப்பிரபந்தத்தில் அடிக்கடி எம்பெருமானாருடைய பாவநத்வத்தை அநுஸந்தித்தார்; ‘என்னுடைய பாவங்களையெல்லாம் போக்கினார், என்னுடைய குற்றங்களையெல்லாம் நீக்கினார்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்படி சொன்னதற்கு அநுதாபப்படுகிறார் இப்பாட்டில், போக்யதையில் ஈடுபட்டுப் பேசவேண்டியிருக்க, பாவநத்வத்தில் ஈடுபட்டமை தோற்றப் பேசினது பிசகு என்று பெரியோர்கள் சொல்லுவர்கள் என்றாராயிற்று.

English Translation

O Ramanuja! I was caught in the net of repeated birth, and lived blinded by the illusion of Karmic cause, Of your own, you took me of despair and uplifted me. The good ones who always meit their hearts steeped in the thought of your compassion, consider it wrong that I even asked you for this.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்