விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,*  மன்னு தாமரைத் தாள்- 
  தன்னை உற்றாட்செய்ய*  என்னை உற்றான் இன்று*  தன்தகவால்- 
  தன்னையுற்றார் அன்றி தன்மை உற்றாரில்லை என்றறிந்து* 
  தன்னை உற்றாரை*  இராமாநுசன் குணம் சாற்றிடுமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து - தம்மைப்பற்றி யிருப்பாருண்டே யொழிய தம் மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குணகீர்த்தனம் பண்ணும் ஸ்வபக்த பக்தர்கள் ஒருவருமில்லையென்று திருவுள்ளம்பற்றி;
என்னை - அடியேனை;
இன்று - இன்றைத்தினத்தில்;
தன் தகவால் - தமது அருளாலே;
தன்னைஉற்று ஆள்செய்யும் தன்மையினோர் - தம்மையடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வபக்தர்களுடைய;

விளக்க உரை

எம்பெருமானார் என்னைத் தம்மிடத்து ஆட்படுத்திக் கொள்ளாமல் தம்மை அடுத்தவர்கள் பக்கல் என்னை ஆட்படுத்தினார். இதற்கு என்ன காரண மென்கிறீர்களோ? எல்லாரும் நம்மையே நேராக வந்து ஆச்ரயிக்கிறார்களே யொழிய நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிப்பார் ஆருமில்லையே, இவ்வமுதனார், நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிக்கிற அதிகாரியாக இருக்கட்டும் - என்று திருவுள்ளம்பற்றிச் செய்தார். இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது வருத்தப்படுத்தும்; ஜாகரூகராயிருந்து அந்வயித்துக்கொள்க;-தன்னையுற்றாரன்றித் தன்னையுற்றாரைக் குணம் சாற்றிடுந் தன்மையுற்றாரில்லை யென்றறிந்து, இராமாநுசன், தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினோர் மன்னா தாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்யத் தன்தகவால் இன்று என்னையுய்த்தான்-என்று அந்வயம். சாற்றிடும் என்கிற விசேஷணபதம் பாட்டின் முடிவில் வந்து நின்றது அபூர்வப் பிரயோகமென்பர். என்னையுற்றான் என்று ஓதுவர்கள்.

English Translation

To protect the interest of those who render service to him, Ramanuja gave his lotus feet as refuge and accepted them, Realising that other than his disciples, there were no seekers, with boundless compassion, he eologised his students so as to make them spread his message.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்