விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,*  அவப் பொருளாம்-
  இருள்சுரந்து எய்த்த*  உலகிருள் நீங்கத்,*  தன் ஈண்டியசீர்-
  அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும் 
  பொருள் சுரந்தான்,*  எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மருள் சுரந்து - அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று;
கூறும் - (சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து - நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்);
எய்த்த - கெட்டுப்போன;
உலகு - உலகத்தவர்களுடைய;
இருள் - அஜ்ஞாநாந்தகாரமானது;

விளக்க உரை

இந்த ஸம்ஸாரிகளுடன் இப்படி விமுகராயிருக்கச் செய்தேயும் இவர்களைத் தம்பேற்க. உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக எம்பெருமானார் முயன்றதைச் சிந்தித்து அவரைக் கொண்டாடுகிறார். மிக்க புண்ணியனான எம்மிராமாநுசன் பொருள் சுரந்தான் என்றும், பொருள் சுரந்தவனான எம்மிராமாநுசன் மிக்க புண்ணியன் என்றும் இரண்டுபடியும் யோஜிக்கலாம்;.

English Translation

The faulty arguments that the proponents of dark-Agamas expound lead only to darkness and decay, To rid the world of that darkness, Ramanuja showered his benevolent grace and expounded that the Lord or Arangam is the master of all souls. He is a truly sanctified soul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்