விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நினையார் பிறவியை நீக்கும் பிரானை,*  இந் நீணிலத்தே-
  எனையாள வந்த இராமாநுசனை*  இருங் கவிகள்-
  புனையார் புனையும் பெரியவர் தாள்களில்*  பூந்தொடையல்- 
  வனையார்*  பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிறவியை நீக்கும் பிரானை-ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்;
இ நீள் நிலத்தே-இப்பெரிய பூமியிலே;
எனை ஆள-என்னை அடிமை கொள்வதற்கே;
வந்த-அவதரித்தவராயுமுள்ள;
இராமாநுசனை-எம்பெருமானாரை;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் அஞ்சுவனே என்ற விவருடைய அச்சம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானார்; அந்தக் கடாக்ஷ வைபவத்தாலே அச்சம் தீரப்பெற்றுத் தேறுதலடைந்து, மநோவாக்காயங்களில் ஏதேனாமொன்றால் எம்பெருமான்றால் எம்பெருமானார் விஷயத்தில் ஒரு நன்மை செய்து வாழ்ந்து போகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப்போகிறார்களே! என அநுதபிக்கிறார் இதில்.

English Translation

Ramanuja came to rule me, and rid me of my birth. Those who do not think of him, or sing his praise in song or worship the feet of those who sing of him, are carriers of darkness, who will suffer more births on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்