விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்*  கலைப் பெருமான்- 
    ஒலிமிக்க பாடலை உண்டு*  தன்னுள்ளம் தடித்து,*  அதனால்-
    வலிமிக்க சீயம் இராமாநுசன்*  மறைவாதியராம்* 
    புலிமிக்கது என்று,*  இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலி மிக்க - நிலவளம் மிகுந்த;
செந்நெல் கழனி - செந்நெல்கழனிகளை யுடைய;
குறையல் - திருக்குறையலூரில் அவதரித்தவராய்;
கலை பெருமான் - சாஸ்த்ர மென்னும்படியான திவ்யப்ரபந்தகளையருளிச் செய்த் திரு மங்கையாழ்வாருடைய;
மிக்க ஒலி பாடலை - அதிசயித்த இசையையுடைய பெரிய திருமொழியை;

விளக்க உரை

கலிமிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.

English Translation

When the tigers of heretic thoughts roamed everywhere freely, Ramanuja came as a lion unto them, strengthened of heart by the Pann-based songs of fertile Kuraiyalur's king kalikanri. I bow to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்