- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
நல்லார் பரவும் இராமாநுசன்,* திரு நாமம் நம்ப-
வல்லார் திறத்தை* மறவாதவர்கள் எவர்,* அவர்க்கே-
எல்லாவிடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*
சொல்லால் மனத்தால்* கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.
காணொளி
பதவுரை
நல்லார் பரவும் இராமாநுசன் - ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய;
திருநாமம் - திருநாமத்தை;
நம்ப வல்லார் திறத்தை - (தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்க வல்லவர்களுடைய படிகளே;
மறவாதவர்கள் எவர் - மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ;
அவர்க்கே - அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே;
விளக்க உரை
தம்முடைய நிலைநின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் - ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக்கடவே னென்றாராயிற்று. தொழும்பு = அடிமை.
English Translation
To those who recall the good ones who praise Ramanuja and place their faith in his name alone –to them and them alone, I shall give my service in thought, word and deed without fatigue, at all times at all places, in all climes.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்