விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,*  நிறை வேங்கடப்பொற்
  குன்றமும்*  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*
  உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
  என்தனக்கும் அது,*  இராமாநுச! இவை ஈந்தருளே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இராமாநுச - எம்பெருமானாரே;
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை - நிலைநின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள;
வேங்கடம் பொன் குன்றமும் - திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும்;
வைகுந்தம் நாடும் - ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும்;
குவலிய பால் கடலும் - கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும்;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் அமுதனார் விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமனார் மிகவும் உகந்தருளி ‘இவருக்கு நாம் எதை செய்வோம்’ என்றிருப்பதாகக் கண்ட அமுதனார், ஸ்வாமிந்! அடியேனுக்கு தேவரீர் வேறொன்றும் செய்தருள வேண்டர் அடியேனுக்கு ஸர்வஸ்மாகிய இந்தத் திருவடித்தாமரைகளைச் தந்தருள வேண்டுமத்தனை யென்கிறார்.

English Translation

O Ramanuja! Put together the joy that you derive from the famous stream-flowing Venkatam hills, the world of Vaikunta, and the fabled Ocean of Milk; I derive that same joy from contemplating your lotus feet. Pray grant me this.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்